Latest Updates
-
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்?
3/4 கப் தயிர் இருந்தா அட்டகாசமான சுவையில் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க..
Curd Kara Chutney Recipe In Tamil: காலை வேளை வந்தாலே பெண்களுக்கு என்ன சமையல் செய்வதென்று யோசித்து முடிவெடுப்பதே ஒரு பெரிய வேலையாக உள்ளது. அதுவும் எத்தனை சட்னிகள் தெரிந்தாலும், இட்லி, தோசைக்கு என்ன சட்னியை இன்று செய்வது என்று முடிவெடுப்பது கடினமாக இருக்கும்.
நீங்கள் இன்று வீட்டில் இட்லி தோசை செய்யப்போகிறீர்கள் என்றால், அதற்கு வழக்கமாக செய்யும் சட்னியை செய்யாமல், 3/4 கப் தயிர் இருந்தால், அதைக் கொண்டு சட்னி செய்யுங்கள். இந்த தயிர் கார சட்னியை ஒருமுறை செய்தால், 2-3 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். அந்த அளவில் அருமையாக இருக்கும்.

உங்களுக்கு தயிர் கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தயிர் கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கெட்டி தயிர் - 3/4 கப்
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 12 பல் (அரைத்துக் கொள்ளவும்)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1/2 டம்ளர்
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் 3/4 கப் கெட்டித் தயிரை எடுத்து அதை நன்கு
அடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்கக வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன்
அரைத்து வைத்துள்ள பூண்டு மற்றும் 1 கொத்து கறிவேப்பிலையை சேர்த்து
நன்கு வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, குறைவான தீயில் வைத்து நன்கு 1 நிமிடம் கிளறி விட
வேண்டும்.
* பின் அதில் 1/2 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, 5 நிமிடம் நன்கு கொதிக்க
வைக்க வேண்டும்.
* இறுதியாக தயிரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பின் அதை அதில்
உள்ள நீர் வற்றும் வரை நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான
தயிர் கார சட்னி தயார்.
Image Courtesy: Chitra's Food Book



Click it and Unblock the Notifications











