Latest Updates
-
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம்
அடிக்கிற வெயிலுக்கு வெள்ளரிக்காய் வெச்சு காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. உடல் சூடு குறையும்...
Cucumber Dosa Recipe In Tamil: தற்போது கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. கொடூரமான வெயிலின் தாக்கத்தினால், நிறைய பேர் வெளியே சென்று விட்டு வந்தாலே, உடல் சூடு பிடித்து அவதிப்படுகிறார்கள். உங்கள் வீட்டிலும் அந்த நிலைமை தானா? அப்படியானால் அவர்களுக்கு அடிக்கடி உடலைக் குளிர்விக்கும்படியான சமையலை செய்து கொடுங்கள்.
அதுவும் கோடைக்காலம் என்பதால் வெள்ளரிக்காய் விலைக் குறைவில் அதிகம் விற்கப்படும். அந்த வெள்ளரிக்காயை வாங்கி, அதைக் கொண்டு காலையில் அருமையான சுவையில் ஒரு தோசை செய்து கொடுங்கள்.

இந்த வெள்ளரிக்காய் தோசை சுவையாக இருப்பது மட்டுமின்றி, உடல் சூட்டையும் குறைக்கும். இந்த தோசைக்கு தக்காளி சட்னி அருமையான சைடு டிஷ்ஷாக இருக்கும். இந்த தோசையை கோடையில் அடிக்கடி செய்தால், உடல் சூடு பிடிப்பதைத் தடுக்கலாம்.
உங்களுக்கு வெள்ளரிக்காய் தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெள்ளரிக்காய் தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ரவை - 1 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* பெரிய வெள்ளரிக்காய் - 1/2
* இஞ்சி - சிறிய துண்டு
* பச்சை மிளகாய் - 3
* அரிசி மாவு - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு கிண்ணத்தில் 1 கப் ரவையை எடுத்துக் கொண்டு, ரவை
மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* பின் பெரிய வெள்ளரிக்காயை எடுத்து, அதை பாதியாக வெட்டி, ஒரு பாதியை
மட்டும் எடுத்து, அதன் தோலை நீக்கிவிட்டு துண்டுகளாக்கிக் கொள்ள
வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் நறுக்கிய வெள்ளரிக்காய், பச்சை மிளகாய்,
இஞ்சி சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அத்துடன் ஊற வைத்துள்ள ரவையை சேர்த்து, அரிசி மாவு
மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை மற்றும்
கொத்தமல்லியை சேர்க்க வேண்டும்.
* பின்னர் அதில் 1 டீஸ்பூன் மிளகு மற்றும் சீரகத்தை சேர்த்து, மாவு
மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது நீரை ஊற்றி, தோசை மாவு
பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தயாரித்து
வைத்துள்ள மாவைக் கொண்டு தோசைகளாக ஊற்றி எடுத்தால், சுவையான
வெள்ளரிக்காய் தோசை தயார்.



Click it and Unblock the Notifications








