Latest Updates
-
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் சொந்த ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு முன்னேற்றதிக்கான கதவு திறக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 02-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
செப்டம்பர் 1-ல் சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் திடீர் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய.. மொறுமொறுப்பான ஸ்டப்டு பனானா
உங்கள் வீட்டில் கேரளா வாழைப்பழம் அல்லது நேந்திரம் பழம் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு சுவையான ஒரு ஸ்நாக்ஸ் செய்யுங்கள். அது தான் ஸ்டப்டு பனானா.
மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் காபி, டீ குடிக்கும் போது மொறுமொறுப்பாக, அதே சமயம் சூடாக ஏதாவது சாப்பிட கேட்கிறார்களா? எப்போதும் பஜ்ஜி, போண்டா செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் கேரளா வாழைப்பழம் அல்லது நேந்திரம் பழம் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு சுவையான ஒரு ஸ்நாக்ஸ் செய்யுங்கள். அது தான் ஸ்டப்டு பனானா. இந்த ஸ்டப்டு பனானா ரெசிபி ஒரு ஸ்வீட் என்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். முக்கியமாக இந்த ஸ்டப்டு பனானா ரெசிபி செய்வது மிகவும் சுலபம் மற்றும் வீட்டில் எப்போதும் உள்ள பொருட்களைக் கொண்டே செய்யலாம்.

உங்களுக்கு மொறுமொறுப்பான ஸ்டப்டு பனானா ரெசிபி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஸ்டப்டு பனானா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நன்கு கனிந்த நேந்திரம் பழம்/கேரளா வாழைப்பழம் - 2
* எண்ணெய்/நெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
உள்ளே வைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* பொடித்த வெல்லம் - 3 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
கோட்டிங்கிற்கு...
* மைதா - 3 டேபிள் ஸ்பூன்
* அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* மைதா - 3 டேபிள் ஸ்பூன்
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
* உப்பு - 1 சிட்டிகை
* பிரட் தூள் - 1/2 கப்
செய்முறை:
* முதலில் உள்ளே வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒரு பௌலில் போட்டு கையால் நன்கு கலந்து விட வேண்டும். இப்போது ஸ்டப் தயார்.
* பின் இரண்டு நேந்திரம் பழத்தின் தோலை நீக்கிவிட்டு, அதன் நடுவே சிறிது சதை பகுதியை நீக்கிவிட்டு, அதனுள் உள்ளே வைப்பதற்கு கொடுத்துள்ள ஸ்டப்பை வைத்து நிரப்ப வேண்டும்.
* பின் ஒரு அகலமான கிண்ணத்தில் மைதா, அரிசி மாவு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றை எடுத்து, சிறிது நீரை ஊற்றி சற்று நீர் போன்று கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு தட்டில் பிரட் தூளையும், மற்றொரு தட்டில் மைதா மாவையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஸ்டப்டு வாழைப்பழத்தை எடுத்து, முதலில் மைதா மாவில் பிரட்டி, பின் நீரில் கலந்து வைத்துள்ள மாவில் பிரட்டி, அதன் பின் பிரட் தூளில் பிரட்டி தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போல் மற்றொரு வாழைப்பழத்தையும் செய்ய வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், குறைவான தீயில் வைக்க வேண்டும்.
* பின் அந்த எண்ணெயில் வாழைப்பழங்களைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து, கத்தியால் துண்டுகளாக்கினால், சுவையான மற்றும் மொறுமொறுப்பான ஸ்டப்டு பனானா தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications