2 தக்காளியும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இந்த சட்னியை செய்யுங்க.. ருசி அள்ளும்..

Posted By:

Thengai Thakkali Chutney Recipe In Tamil: இட்லி, தோசைக்கு சரியான சைடு டிஷ் என்றால் அது சட்னி தான். இந்த சட்னியில் பல வகைகள் உள்ளன. அதுவும் வெறும் தேங்காய் சட்னியை எடுத்துக் கொண்டாலே, அதை பல விதங்களில் செய்யலாம். உங்கள் வீட்டில் உள்ளோருக்கு தேங்காய் சட்னி என்றால் ரொம்ப பிடிக்குமா? அதுவும் இந்த தேங்காய் சட்னியை வித்தியாசமான சுவையில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்களா?

Coconut Tomato Chutney How To Make Thengai Thakkali Chutney Recipe

அப்படியானால் தேங்காயுடன் தக்காளி சேர்த்து, தேங்காய் தக்காளி சட்னியை செய்து கொடுங்கள். இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, இட்லி தோசையுடன் சாப்பிட்டால் வழக்கமாக சாப்பிடுவதை விட சற்று அதிகமாக சாப்பிடுவீர்கள். அந்த அளவில் இந்த சட்னி சுவையாக இருக்கும்.

உங்களுக்கு இந்த தேங்காய் தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 3
* இஞ்சி - 1 துண்டு (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 3 பல்
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு..

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கலைப் பருப்பு, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய இஞ்சி, பூண்டு மற்றும் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய தக்காளி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு கிண்ணத்தில் அரைத்த சட்னியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான தேங்காய் தக்காளி சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, October 31, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion