தேங்காய் தோசையும், முருங்கைக்கீரை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..

Posted By:

Coconut Dosa And Murungai Keerai Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு நல்ல சத்தான, அதே சமயம் சுவையான ஒரு டிபனை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் தேங்காய் தோசையும், முருங்கைக்கீரை சட்னியும் செய்து கொடுங்கள். இந்த டிபன் காம்பே மிகவும் சுவையாக இருக்கும் மற்றும் இந்த காம்போவில் உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத சில அத்தியாவசிய சத்துக்களும் நிறைந்துள்ளன. முருங்கைக்கீரை சாப்பிட மறுக்கும் உங்கள் பிள்ளைகளை, இந்த கீரையை சாப்பிட வைக்க நினைத்தால் இப்படி சட்னியாக செய்து கொடுக்கலாம்.

Coconut Dosa And Murungai Keerai Chutney How To Make This Healthy Breakfast

உங்களுக்கு இந்த தேங்காய் தோசையும், முருங்கைக்கீரை சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் தோசை மற்றும் முருங்கைக்கீரை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

சட்னிக்கு...

* கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* எள்ளு - 1 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வேர்க்கடலை - 25 கிராம்
* பச்சை மிளகாய் - 4
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி
* பூண்டு - 20 பல்
* முருங்கைக்கீரை - 1 கட்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* புளி - 15 கிராம்
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* நெய் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து

தோசைக்கு...

* புழுங்கல் அரிசி - 200-250 கிராம் (4 மணிநேரம் ஊற வைத்தது)
* சாதம் - 75 கிராம்
* துருவிய தேங்காய் - 75 கிராம்
* இளநீர் - 1
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் 4 மணிநேரம் ஊற வைத்த புழுங்கல் அரிசியை மிக்சர் ஜாரில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சாதம், துருவிய தேங்காய் சேர்த்து, 1 இளநீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, மூடி வைத்து 12 மணிநேரம் புளிக்க வைக்க வேண்டும்.
* 12 மணிநேரம் கழித்து புளிக்க வைத்த மாவை திறந்து, தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு ஆப்ப மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அரைத்த மாவைக் கொண்டு தோசையான ஊற்றி, மேலே நெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான தேங்காய் தோசை தயார்.
* பின்னர் சட்னி செய்வதற்கு ஒரு அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், எள்ளு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை , பச்சை மிளகாய், புளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். அதன் பின் அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பூண்டு சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.
* பின்னர் அதில் முருங்கைக்கீரையை சேர்த்து, நன்கு சுருண்டு வர வதக்க வேண்டும்.
* பின்பு அதில் சுவைக்கேற்ப உப்பு, துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வதக்கிய இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் வதக்கிய பொருட்களை மிக்சர் ஜாரில் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொக்க வேண்டும்.
* இறுதியாக சட்னியை தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கடுகு, வரமிளகாய், உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கலந்தால், முருங்கைக்கீரை சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, November 26, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion