Latest Updates
-
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா?
சௌ சௌ தோலை தூக்கி போடுவீங்களா? இனிமேல் அப்படி செய்யாம இந்த மாதிரி சட்னி செய்யுங்க..
Chow Chow Peel Chutney Recipe: இட்லி, தோசை என்று எடுத்துக் கொண்டால், அதற்கு சரியான காம்பினேஷன் சட்னி தான். இதுவரை எத்தனையோ சட்னியை நீங்கள் செய்திருப்பீர்கள். அதில் பெரும்பாலும் செய்யக்கூடிய சட்னி என்று எடுத்துக் கொண்டால், அது தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னி, பூண்டு சட்னி என்றாகவே இருக்கும்.
இப்படி தினமும் ஒரு மாதிரியான சட்னியை செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான, அதே சமயம் வீட்டில் இதுவரை முயற்சி செய்திராத சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சௌ சௌ காய் உள்ளதா?

அப்படியானால் அதன் தோலை சீவி விட்டு, அதை தூக்கி எறியாமல், அவற்றைக் கொண்டு சட்னி செய்யுங்கள். இந்த சட்னி மிகவும் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது நீங்கள் எதிர்பார்த்த வகையில் வித்தியாசமாகவும் இருக்கும். இந்த சட்னியானது இட்லி தோசையுடன் சாப்பிட அற்புதமாக இருக்கும்.
உங்களுக்கு சௌ சௌ தோல் கொண்டு எப்படி சட்னி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சௌ சௌ தோல் கொண்டு செய்யக்கூடிய சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சௌ சௌ தோல் - 1 கப்
* வரமிளகாய் - 4
* பூண்டு - 4- பல்
* புளி - ஒரு சிறிய துண்டு
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பூண்டு, வரமிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்க
வேண்டும்.
* பின் அதில் சௌசௌ காயின் தோலை சேர்த்து 10-12 நிமிடம் வதக்கி இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* பிறகு வதக்கிய பொருட்களை மிக்சர் ஜாரில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதில் புளி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, சட்னியுடன்
சேர்த்து கலந்தால், சுவையான சௌ சௌ சட்னி தயார்.
Image Courtesy: swapnaskitchen



Click it and Unblock the Notifications
