Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்..
Chow Chow Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான சைடு டிஷ் செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் சௌசௌ உள்ளதா? ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர் சௌசௌ சாப்பிடமாட்டார்களா? அப்படியானால் அவர்களுக்கு அந்த சௌசௌ காயைக் கொண்டு கிரேவி செய்து கொடுங்கள். இந்த பக்குவத்தில் கிரேவி செய்யும் போது, பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த கிரேவி சப்பாத்திக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

உங்களுக்கு இந்த சௌசௌ கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சௌசௌ கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* சௌசௌ - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
வறுத்து அரைப்பதற்கு...
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 6
* மல்லி - 2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* தக்காளி - 2 (நறுக்கியது)
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1
* அரைத்த விழுது
* தண்ணீர் - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் குக்கரில் நறுக்கிய சௌசௌ காயை சேர்த்து, அத்துடன் மஞ்சள்
தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது நீரை ஊற்றி கலந்து, குக்கரை
மூடி, 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பட்டை, கிராம்பு,
மல்லி, சீரகம், மிளகு, வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நல்ல மணம் வரும்
வரை வறுக்க வேண்டும்.
* பின் அதில் துருவிய தேங்காயை சேர்த்து 1 நிமிடம் வறுத்து இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து முதலில்
கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த விழுதை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் வேக வைத்த சௌசௌ காயை நீருடன் அப்படியே சேர்த்து மூடி
வைத்து 5 நிமிடம் கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவி கிளறி
இறக்கினால், சுவையான சௌசௌ கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications
