Just In
- 1 hr ago
இன்றைய ராசிப்பலன் (27.01.2021): இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி மேல் வெற்றி வரப்போகிறதாம்…
- 1 day ago
இன்றைய ராசிப்பலன் (26.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- 1 day ago
மைதா போண்டா
- 1 day ago
உங்க வாயை சுத்தி அசிங்கமா கருப்பா இருக்கா? இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...
Don't Miss
- Movies
நாங்கள் நண்பர்களாக இருந்தோம்.. பாலாஜியுடனான உறவு குறித்து மனம் திறந்த யாஷிகா ஆனந்த்!
- News
டெல்லி செங்கோட்டையில் போலீசார் மீது கொடூர தாக்குதல்- பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ
- Automobiles
புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!
- Finance
ஜகா வாங்கிய முகேஷ் அம்பானி.. ஜியோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
- Sports
நிலையில்லாத ஆட்டங்கள்... மோஹுன் பகனுடன் மோதும் நார்த்ஈஸ்ட்... வெற்றிக்கனவு பலிக்குமா?
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: சாக்லேட் ப்ரௌனி ரெசிபி
கிறிஸ்துமஸ் என்றாலே பலரது நினைவிற்கு வருவது கேக்காகத் தான் இருக்கும். கேக்கில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் சாக்லேட் ப்ரௌனி. இதுவரை நீங்கள் சாக்லேட் ப்ரௌனியை கடைகளில் தான் வாங்கி சுவைத்திருப்பீர்கள். என்ன தான் இது உங்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருந்தாலும், கடைகளில் வாங்கி சாப்பிடும் போது, அளவாகவே சாப்பிட முடியும். ஆனால் அதையே வீட்டில் உங்களுக்கு தேவையான அளவு செய்தால், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் அல்லவா?
ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை கிறிஸ்துமஸ் அன்று ஸ்பெஷலாக சாக்லேட் ப்ரௌனியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மைதா - 1/2 கப்
* உப்பில்லாத வெண்ணெய் - 1/2 கப்
* சர்க்கரை - 3/4 கப்
* முட்டை - 2
* கொக்கோ பவுடர் - 1/3 கப்
* வென்னிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
* பேக்கிங் பவுடர் - 1/4 டீஸ்பூன்
* சாக்லேட் சிப்ஸ் - 1 கப்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஓவனை 180 டிகிரி செல்சியஸில் சூடேற்றிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பேக்கிங் ட்ரே/பேனை எடுத்து, அதன் மேல் அலுமினியத் தாளை விரித்து, மேலே எண்ணெயைத் தடவி தனியாக வைத்துக் கொள்ளவும்.
* பின்பு ஒரு பேனில் வெண்ணெயைப் போட்டு அடுப்பில் வைத்து, குறைவான தீயில் உருக வைக்கவும்.
* பின் அதில் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* இப்போது அதில் கொக்கோ பவுடர், வென்னிலா எசன்ஸ் மற்றும் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கிளறிவிட வேண்டும்
* பின்பு அதில் மைதா, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து நன்கு கிளறி விடுங்கள்.
* பின் அதில் சாக்லேட் சிப்ஸ் சேர்த்து நன்கு கிளறி விட்டு, அடுத்து அதை எண்ணெய் தடவிய அலுமினியத் தாளில் ஊற்றி தட்டையாக பரப்பிவிடவும்.
* பிறகு அந்த ட்ரேயை ஓவனில் வைத்து, 20 நிமிடம் பேக்கிங் செய்து எடுத்தால், சுவையான சாக்லேட் ப்ரௌனி தயார்.