Latest Updates
-
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் சொந்த ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு முன்னேற்றதிக்கான கதவு திறக்கும் நாளாக இருக்குமாம்
சைனீஸ் ஸ்டைல் ஜிஞ்சர் கார்லிக் சிக்கன்
இதுவரை சைனீஸ் ரெசிபிக்கள் ரெஸ்டாரண்ட்டுகளில் மட்டும் தான் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அந்த சைனீஸ் ரெசிபிக்களுள் ஒன்றான ஜிஞ்சன் கார்லிக் சிக்கன் ரெசிபியை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம் தெரியுமா?
உங்களுக்கு சைனீஸ் ரெசிபிக்கள் ரொம்ப பிடிக்குமா? இதுவரை சைனீஸ் ரெசிபிக்கள் ரெஸ்டாரண்ட்டுகளில் மட்டும் தான் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அந்த சைனீஸ் ரெசிபிக்களுள் ஒன்றான ஜிஞ்சன் கார்லிக் சிக்கன் ரெசிபியை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம் தெரியுமா? அதுவும் இந்த ரெசிபியை வீட்டில் உள்ள சோயா சாஸ், வினிகர் போன்றவற்றை கொண்டே சுலபமாக செய்யலாம்.

உங்களுக்கு சைனீஸ் ஸ்டைல் ஜிஞ்சர் கார்லிக் சிக்கன் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சைனீஸ் ஸ்டைல் ஜிஞ்சர் கார்லிக் சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
* பூண்டு - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* எள்ளு விதைகள் - 2 டீஸ்பூன்
ஊற வைப்பதற்கு...
* சிக்கன் நெஞ்சுக்கறி - சிறிது (சிறு துண்டுகளாக்கப்பட்டது)
* ஒயிட் பெப்பர் பவுடர் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1 டேபிள் ஸ்பூன்
* சோள மாவு - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சோள மாவு - 4 டேபிள் ஸ்பூன்
சாஸ் செய்வதற்கு...
* சிக்கன் ஸ்டாக்/சிக்கன் வேக வைத்த நீர் -1 கப்
* சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
* ரைஸ் வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்
* சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
* சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பின் அந்த சிக்கனில் உப்பு, மிளகுத் தூள், எண்ணெய், 1 டேபிள் ஸ்பூன் சோளா மாவு மற்றும் சிறிது நீர் சேர்த்து நன்கு கிளறி, 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு சிறிய பௌலில் சிக்கன் ஸ்டாக், சோயா சாஸ், வினிகர் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து, அதை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடாவதற்குள், ஊற வைத்துள்ள சிக்கனில் 4 டேபிள் ஸ்பூன் சோளமாவை சேர்த்து நன்கு கிளறி, பின் அதை எண்ணெயில் போட்டு 30 நொடிகள் பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் மீண்டும் பொரித்த சிக்கனை எண்ணெயில் போட்டு 30-45 நொடிகள் பொரித்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு டேபிள் ஸ்பூன் சோள மாவில் 3 டேபிள் ஸ்பூன் நீர் சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி, பூண்டு சேர்த்து 30 நொடிகள் நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தனியாக கலந்து வைத்துள்ள சாஸை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அதில் வறுத்த சிக்கன் மற்றும் கலந்து வைத்துள்ள சோள மாவு நீரை சேர்த்து நன்கு சுண்ட வறுத்து இறக்கி, மேலே வெள்ளை எள்ளு விதைகளைத் தூவினால், சுவையான சைனீஸ் ஸ்டைல் ஜிஞ்சர் கார்லிக் சிக்கன் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
