Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
ஈஸியான... சில்லி மஸ்ரூம் ரெசிபி
உங்கள் வீட்டில் காளான் உள்ளதா? வீட்டில் உள்ளோர் காளானை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அந்த காளானைக் கொண்டு சில்லி மஸ்ரூம் செய்யுங்கள்.
மழைப் பெய்யும் போது வாய்க்கு சுவையாக, அதே சமயம் சூடாக ஏதாவது செய்து சாப்பிட தோன்றுகிறதா? உங்கள் வீட்டில் காளான் உள்ளதா? வீட்டில் உள்ளோர் காளானை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அந்த காளானைக் கொண்டு சில்லி மஸ்ரூம் செய்யுங்கள். இந்த சில்லி மஸ்ரூம்மை ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம் அல்லது ப்ரைடு ரைஸிற்கு சைடு டிஷ்ஷாகவும் சாப்பிடலாம். முக்கியமாக இந்த சில்லி மஸ்ரூம் செய்வது மிகவும் சுலபம்.

உங்களுக்கு சில்லி மஸ்ரூம் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சில்லி மஸ்ரூம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காளான் - 200 கிராம் (நறுக்கியது)
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
* ஸ்பிரிங் ஆனியன் - அலங்கரிப்பதற்கு...
ஊற வைப்பதற்கு...
* மைதா - 1 கப்
* சோள மாவு - 1/2 கப்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
சாஸ் செய்வதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* வரமிளகாய் - 1
* சோயா சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
* வினிகர் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடாவதற்குள், ஒரு பாத்திரத்தில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் எடுத்து, நீர் சேர்த்து சற்று கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய காளானை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் பிசைந்த காளானை சிறிது சிறிதாக சேர்த்து பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் சோயா சாஸ், வினிகர், உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி, சிறிது நீர் ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து பொரித்த காளானை சேர்த்து நன்கு ஒன்று சேரும் வகையில் கிளறி இறக்கி, மேலே ஸ்பிரிங் ஆனியனைத் தூவினால், சில்லி மஸ்ரூம் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications











