Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
மீந்து போன இட்லி இருந்தா.. இப்படி செய்யுங்க.. உடனே காலியாகிடும்...
Chilli Idly Recipe In Tamil: உங்கள் வீட்டில் மீந்து போன இட்லி உள்ளதா? பொதுவாக இப்படி இட்லி மீந்து போனால், அதை உப்புமாவாகத் தான் செய்வீர்களா? ஆனால் அப்படி இட்லி உப்புமா செய்தாலும், வீட்டில் யாரும் சீண்டக்கூடமாட்டார்களா? அப்படியானால் அந்த இட்லியைக் கொண்டு சில்லி இட்லி செய்யுங்கள்.
இப்படி செய்யும் போது, செய்த உங்களுக்கே கிடைக்காத அளவில் உடனே காலியாகிவிடும். முக்கியமாக இந்த சில்லி இட்லி சட்டென்று செய்யக்கூடியவாறு செய்வதற்கு ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு இந்த சில்லி இட்லியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சில்லி இட்லி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீந்து போன இட்லி - 4
* எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மஞ்சள் தூள் - 1/4
* மிளகாய் தள் - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/4
* கரம் மசாலா - 1/2
* மிளகுத் தூள் - 1/4
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 3 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மீந்து போன இட்லியை சற்று நீளத் துண்டுகளாக வெட்டிக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், இட்லி துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக
ப்ரை செய்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் கறிவேப்பிலையை
சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத் தூள், கரம் மசாலா,
மிளகுத் தூள் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சர்க்கரை சேர்த்து, 3 டேபிள் ஸ்பூன் நீரை ஊற்றி
கிளறி, நன்கு கொதிக்க ஆரம்பித்தும், ப்ரை செய்து வைத்துள்ள இட்லி
துண்டுகளை சேர்த்து நன்கு மசாலா இட்லியுடன் ஒன்று சேரும் வரை கிளறி
விட்டு, எலுமிச்சை சாற்றினை சேர்த்து, சிறிது கொத்தமல்லியைத் தூவி
கிளறி இறக்கினால், சுவையான சில்லி இட்லி தயார்.



Click it and Unblock the Notifications