Just In
- 4 hrs ago
இந்த 6 ராசிகள் அபூர்வமான ராசிகளாம்... இந்த ராசிகளில் குறைவான மக்களே இருக்காங்களாம்... உங்க ராசி என்ன?
- 4 hrs ago
இந்த கோடையில் நீங்க உடற்பயிற்சி செய்யும்போது என்னென்ன செய்யணும் என்னென்ன செய்யக்கூடாது தெரியுமா?
- 5 hrs ago
மிதுனம் செல்லும் செவ்வாயால் அடுத்த 2 மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கவனமா இருக்கணுமாம்.. உங்க ராசியும் இருக்கா?
- 7 hrs ago
உங்க கணவன் அல்லது மனைவி உங்ககிட்ட ரொம்ப மோசமா நடந்துகிறாங்களா? அப்ப 'இத' பண்ணுங்க...!
Don't Miss
- Sports
41 வயசானாலும் தன்னோட அதிரடியை குறைச்சுக்காத யூனிவர்சல் பாஸ்... 350 சிக்ஸ்களை அடித்து சாதனை!
- News
கொரோனா பரவாமல் தடுக்க தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் - தனி மனித இடைவெளி அவசியம் : தமிழக அரசு
- Finance
அதானி குழுமத்துடன் கூட்டணி சேர்ந்த பிளிப்கார்ட்.. அது புதுசா இருக்கே..!
- Automobiles
இந்தியாவில் அதிக சொகுசு கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் எது தெரியுமா? சரியா சொல்லுங்க பார்ப்போம்...
- Movies
தியேட்டரில் ரசிகர்களுடன் படம் பார்த்த கொரோனா பாதித்த நடிகை...வலுக்கும் எதிர்ப்பு
- Education
பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க? ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சிக்கன் டிக்கா மசாலா
இன்று உங்கள் வீட்டில் சிக்கன் எடுத்துள்ளீர்களா? உங்களுக்கு சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபி செய்ய ஆசையாக உள்ளதா? அப்படியானால் சிக்கன் டிக்கா மசாலா செய்யுங்கள். இந்த ரெசிபியானது சிக்கனை தனியாக ஒரு மசாலாவில் ஊற வைத்து, பின் வறுத்து எடுத்து, கிரேவி தயாரித்து சேர்க்கப்படும். இந்த மசாலா சப்பாத்தி, நாண், நெய் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். பெரும்பாலும் இதை நீங்கள் ஹோட்டல்களில் தான் சுவைத்திருப்பீர்கள். இன்று உங்கள் வீட்டில் செய்து சுவையுங்கள்.
கீழே சிக்கன் டிக்கா மசாலா எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* சிக்கன் - 300 கிராம் (சிறு துண்டுகளாக்கப்பட்டது)
* தயிர் - 1/2 கப்
* சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 6 பல் (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உலர்ந்த வெந்தய கீரை - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
மசாலா கிரேவிக்கு...
* வெங்காயம் - 1
* தக்காளி - 1
* முந்திரி - 5
* சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கிராம்பு - 1
* பட்டைத் தூள் - 1/4 டீஸ்பூன்
* ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
* பிரஷ் க்ரீம் - 1/2 கப்
* வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பௌலில் கழுவிய சிக்கனை எடுத்துக் கொண்டு, அத்துடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள தயிர், சீரகப் பொடி, மல்லித் தூள், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு, மிளகாய் தூள், உலர்ந்த வெந்தயக் கீரை மற்றும் உப்பை சேர்த்து நன்கு பிரட்டி, குறைந்தது அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* சிக்கன் நன்கு ஊறியதும், ஒரு பேனில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து ஒரு 8 நிமிடம் நன்கு மென்மையாக வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக சிக்கனை வேக வைத்துவிட வேண்டாம். பின் சிக்கன் மிகவும் கடினமாகவும், ரப்பர் போன்றும் ஆகிவிடும். முக்கியமாக சிக்கனில் நீர் சேர்க்காதீர்கள்.
* அடுத்து மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு வதக்க வேண்டும்.
* பின் தக்காளியை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, முந்திரியை சேர்த்து வதக்கி இறக்க வேண்டும். இந்த கலவையை நன்கு குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து உருகியதும், கிராம்பு, பட்டைத் தூள், ஏலக்காய் பொடி சேர்த்து தாளித்து, பின் சீரகப் பொடி, மல்லித் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின்னர் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்த்து சில நிமிடங்கள் கிளற வேண்டும்.
* பின்பு உலர்ந்த வெந்தயக் கீரையை கையால் நசுக்கி மேலே தூவி விட வேண்டும். இப்போது அந்த சிக்கன் துண்டுகளை சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் க்ரீம் சேர்த்து நன்கு கிளறி, 5 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். வேண்டுமானால் உங்களுக்கு தேவையான அளவு நீரை சேர்த்துக் கொள்ளலாம்.
* இறுதியில் மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான சிக்கன் டிக்கா மசாலா தயார்.
Image Courtesy: archanaskitchen