Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
பாஸ்தாவை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருமுறை இப்படி செய்யுங்க.. இன்னும் எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க...
Chicken Pasta Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பாஸ்தா என்றால் பிடிக்குமா? இதனால் உங்கள் வீட்டில் அடிக்கடி பாஸ்தா செய்வீர்களா? அதுவும் ஒரே மாதிரி சிம்பிளாகத் தான் செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை பாஸ்தா செய்வதாக இருந்தால், சிக்கன் பாஸ்தா செய்து கொடுங்கள்.
இந்த சிக்கன் பாஸ்தா செய்வது மிகவும் சுலபம். முக்கியமாக இப்படி சிக்கன் பாஸ்தாவை செய்து கொடுத்தால், உங்கள் வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு சிக்கன் பாஸ்தாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் பாஸ்தா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* பாஸ்தா - 2 கப்
* தண்ணீர் - 6 கப்
* உப்பு - சிறிது
சாஸ் செய்வதற்கு...
* நன்கு கனிந்த தக்காளி - 1/2 கிலோ
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் -1/2
* மிளகு தூள் - 1/2
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை -1/2
* இத்தாலியன் சீசனிங் - 1 டீஸ்பூன்
பாஸ்தாவிற்கு...
* எலும்பில்லாத சிக்கன் - 200 கிராம்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* சீஸ் - 1/2 கப் (துருவியது)
செய்முறை:
* முதலில் பாஸ்தாவை வேக வைப்பதற்கு ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி,
உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும்,
அதில் பாஸ்தாவை சேர்த்து, வேக வைத்து எடுத்து, நீரை வடிகட்டிவிட்டு,
ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு சாஸ் செய்வதற்கு மிக்சர் ஜாரில் 1/2 கிலோ தக்காளியை போட்டு
நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயத்தை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த தக்காளியை சேர்த்து, அத்துடன் மிளகாய் தூள்,
மிளகுத் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, பச்சை வாசனை
நீங்கி தக்காளியில் உள்ள நீர் ஓரளவு வற்றும் வரை வேக வைக்க
வேண்டும்.
* பின் அதில் சர்க்கரை மற்றும் இத்தாலியன் சீசனிங் சேர்த்து கிளறி 2
நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் எலும்பில்லாத சிக்கனை சேர்த்து நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், சிக்கனை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி
விட்டு சிக்கனை வேக வைக்க வேண்டும்.
* சிக்கன் நன்கு வெந்ததும், அதில் குடைமிளகாயை சேர்த்து 1 நிமிடம்
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் செய்து வைத்துள்ள சாஸை ஊற்றி கிளறி விட வேண்டும்.
* பின் வேக வைத்துள்ள பாஸ்தாவை சேர்த்து நன்கு கிளறி, 3 நிமிடம் வேக
வைக்க வேண்டும்.
* இறுதியாக சீஸை தூவி 2 நிமிடம் கிளறி இறக்கினால், சுவையான சிக்கன்
பாஸ்தா தயார்.



Click it and Unblock the Notifications
