Latest Updates
-
செப்டம்பர் 02-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
செப்டம்பர் 1-ல் சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் திடீர் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
நார்த் கர்நாடகா தேங்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
வெங்காயம், தக்காளி இருந்தா போதும்.. இப்படி குருமா செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
தங்கத்தை விட 20 மடங்கு விலையுயர்ந்த உலோகம் எது தெரியுமா? இதை வைத்து என்னென்ன செய்றாங்க தெரியுமா? -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
18 மாதங்களுக்கு பின் கடக ராசிக்குள் நுழையும் கேது: இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம் -
ஓணம் ஸ்பெஷல் பழ நுருக்கு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
தினமும் காலையில் 2 கிராம்பை மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்! -
சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் கோலாப்பூரி பச்சை பயறு குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க
ஹைதராபாத் சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டல் சுவையில் அட்டகாசமாக இருக்கும்
Andhra Style Chicken Majestic Recipe in Tamil: சண்டே வந்தாலே சிக்கன் சாப்பிட வேண்டுமென்பது எழுதப்படாத விதியாக மாறிவிட்டது. இன்று உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கி சமைக்கப் போகிறீர்களா? வழக்கமான சிக்கன் செய்யாமல் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வித்தியாசமான சிக்கன் சைடு டிஷ் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் ஆந்திராவில் புகழ் பெற்ற மெஜஸ்டிக் சிக்கனை செய்யுங்கள்.

இந்த ஆந்திரா ஸ்டைல் மெஜஸ்டிக் சிக்கன் சாதம், பிரியாணி மற்றும் நெய் சோறு என அனைத்திற்கும் அட்டகாசமான சைடிஷாக இருக்கும். சொல்லப்போனால் இந்த சிக்கனை எந்த உணவும் இல்லாமல் சும்மாவே சாப்பிடலாம். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இந்த சிக்கன் ஆந்திரா, பெங்களூரில் உள்ள மிகப்பெரிய ஹோட்டல்களில் பிரபலமான உணவாக உள்ளது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் அட்டகாசமான சுவையில் இருக்கும்.
உங்களுக்கு ஆந்திரா பேமஸ் மெஜஸ்டிக் சிக்கனை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா மெஜஸ்டிக் சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- அரை கிலோ எலும்பில்லா சிக்கன்
- அரை கப் மோர்
- தேவையான அளவு உப்பு
- 1 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
- ½ ஸ்பூன் மிளகுத்தூள்
- 1 முட்டை, நன்கு அடித்தது
- 3 ஸ்பூன் சோளமாவு
- 1 ஸ்பூன் பூண்டு, பொடியாக நறுக்கியது
- 1 ஸ்பூன் இஞ்சி, பொடியாக நறுக்கியது
- 2 பச்சை மிளகாய், கீறியது
- 2 வர மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 ஸ்பூன் காஷ்மீரி சிவப்பு மிளகாய்த்தூள்
- ¼ ஸ்பூன் மஞ்சள்தூள்
- ½ ஸ்பூன் கரம் மசாலாத்தூள்
- 2 ஸ்பூன் கெட்டியான தயிர்
- 1 ஸ்பூன் சோயா சாஸ்
- 2 ஸ்பூன் நறுக்கிய புதினா இலைகள்
- 1 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
- பொரிப்பதற்கு எண்ணெய்
செய்முறை:
- எலும்பில்லாத சிக்கனை மெல்லிய நீளமான துண்டுகளாக வெட்டவும்.
- ஒரு கிண்ணத்தில், மோர் மற்றும் உப்பைக் கலக்கவும். சுத்தம் செய்த சிக்கனை உப்பு கலந்த மோரில் போட்டு குளிர்சாதனப் பெட்டியில் குறைந்தது 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
- நாளை செய்வதாக இருந்தால் இரவு முழுவதும் குளிர்சாதனப் பெட்டியில் ஊறவைக்கவும். இப்படி செய்வதன் மூலம் சுவை அதிகரிக்கும்.
- பின்னர் மோர் முழுவதையும் நன்றாக பிழிந்துவிட்டு, சிக்கனை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
- அதில் இஞ்சி-பூண்டு விழுது, மிளகுத்தூள், அடித்து வைத்த முட்டை மற்றும் சோள மாவு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- அடி கனமான பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி, அதிக தீயில் சூடாக்கவும். எண்ணெய் நன்கு சூடானதும் தீயை மிதமான நிலைக்குக் குறைத்து, சிக்கன் துண்டுகளைச் சிறிது சிறிதாகப் போட்டுப் பொரிக்கவும்.
- சிக்கன் எல்லாப் பக்கங்களும் பொன்னிறமாகும் வரை வேகவைக்கவும். பின்னர் அவற்றை எடுத்து தனியே வைக்கவும்.
- மற்றொரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்; அதில் இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து 30 வினாடிகள் வதக்கவும்.
- கீறிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையைச் சேர்த்து, மேலும் 30 வினாடிகள் வதக்கவும்.
- தீயைக் குறைத்து, வர மிளகாய், காஷ்மீரி மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா ஆகியவற்றைச் சேர்க்கவும். மிதமான தீயில் 30 வினாடிகள் வதக்கவும்.
- பின்னர் தயிரைச் சேர்த்து மசாலாக்களுடன் நன்றாகக் கலக்கவும். இதை 2 நிமிடம் கொதிக்க விடவும்.
- பின்னர் சோயா சாஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
- தீயை அதிகப்படுத்தி, வறுத்த சிக்கன் துண்டுகளைச் சேர்க்கவும். 3-4 நிமிடங்கள் மசாலாவில் வதக்கவும்.
- இறுதியாகநறுக்கிய புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்க்கவும். 1 நிமிடம் வதக்கவும்.
- அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் அருமையான சிக்கன் மெஜஸ்டிக் ரெடி!



Click it and Unblock the Notifications