Latest Updates
-
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது!
மதுரை முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு - எப்படி செய்யணும் தெரியுமா?
Madurai Munniyandi Vilas Style Chicken Kuzhambu Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சிக்கன் செய்வீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் சிக்கன் பிரியரா? ஆனால் எப்போது சிக்கனை வாங்கினாலும், ஒரே சுவையில் குழம்பு, சிக்கன் 65, சிக்கன் வறுவல் என்று செய்து சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் சிக்கனை குழம்பு வைத்து சாப்பிட நினைக்கிறீர்களா?
அப்படியானால் ஒருமுறை மதுரை முனியாண்டி விலாஸ் ஸ்டைல் சிக்கன் குழம்பு செய்து சுவையுங்கள். இந்த சிக்கன் குழம்பு ஆளே மயக்கும் அளவில் நல்ல மணத்துடனும், சுவையுடனும் இருக்கும். முக்கியமாக இந்த குழம்பு சாதத்துடன் மட்டுமின்றி, அனைத்து விதமான டிபனுடனும் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.
உங்களுக்கு இந்த மதுரை முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மதுரை முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1/2 கிலோ
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* தேங்காய் பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - தேவையான அளவு
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
வறுத்து அரைப்பதற்கு...
* வரமிளகாய் - 6
* மல்லி - 1 டீஸ்பூன்
* பச்சரிசி - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கசகசா - 1 டீஸ்பூன்
* பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 இன்ச்
* கிராம்பு - 3
* காய்ந்த தேங்காய் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கிவிட்டு, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து, மஞ்சள் தூள் தூவி, சிக்கனின் நிறம் மாறும் வரை நன்கு வதக்கவும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு பிரட்டி, 2 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு மற்றும் தேங்காய் பேஸ்ட் சேர்த்து 5-8 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
* பின் மிதமான தீயில் குழம்பில் இருந்து எண்ணெய் தனியாக பிரியும் வரை கொதிக்க விட்டு, கொத்தமல்லியைத் தூவி மூடி வைத்து இறக்கினால், மதுரை முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு ரெடி!!!



Click it and Unblock the Notifications
