Latest Updates
-
இந்தியாவின் 'காபி தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? நம்ம பக்கத்துக்கு ஊர்தானா? -
அக்டோபர் 09-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் பண்டிகை கால இனிப்புக்களை ரசிப்பதற்கான 7 சிறந்த வழிகள்! -
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க..
சிக்கன் எடுத்தா இப்படி மசாலா அரைச்சு கிரேவி செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்..
Spicy Chicken Gravy Recipe In Tamil: இந்த வார ஞாயிற்றுக்கிழமை உங்கள் வீட்டில் காலை டிபனாக சப்பாத்தி அல்லது பூரி செய்ய போகிறீர்களா? அதற்கு சைடு டிஷ்ஷாக சிக்கன் கிரேவியை செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் வித்தியாசமான சுவையில் சிக்கன் கிரேவியை செய்ய வேண்டுமா? அப்படியானால் தனித்துவமான மசாலாவை தயாரித்து, அதைக் கொண்டு கிரேவி செய்யுங்கள். இப்படி சிக்கனை கிரேவி செய்யும் போது, அது பூரி, சப்பாத்தியுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

உங்களுக்கு இந்த சிக்கன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வதக்கி அரைப்பதற்கு..
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 1 கப்
* உப்பு - சிறிது
* காஷ்மீரி வரமிளகாய் - 7
* பூண்டு - 1 கையளவு
* இஞ்சி - 2 இன்ச்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* கிராம்பு - 3
* கல்பாசி - சிறிது
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பட்டை - 2
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/4 கப்
ஊற வைப்பதற்கு..
* சிக்கன் - 3/4 கிலோ
* உப்பு - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தயிர் - 2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* அன்னாசிப்பூ - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* ஊற வைத்துள்ள சிக்கன்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* அரைத்த மசாலா
* சுடுநீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சின்ன வெங்காயம் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் காஷ்மீரி வரமிளகாய், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை
சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கிராம்பு, கல்பாசி, பட்டை, சீரகம், சோம்பு, மிளகு
சேர்த்து வறுக்க வேண்டும்.
* அடுத்து அதில் துருவிய தேங்காயை சேர்த்து நல்ல மணம் வரும் வரை
வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் சேர்த்து நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் கழுவிய சிக்கனை எடுத்துக் கொண்டு,
அத்துடன் 1 டீஸ்பூன் உப்பு, மிளகாய் தூள், மல்லித் தூள், மஞசள் தூள்
மற்றும் தயிர் சேர்த்து நன்கு பிரட்டி, 1 மணிநேரம் ஊற வைக்க
வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு, அன்னாசிப்பூ, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் ஊற வைத்த சிக்கனை சேர்த்து 3 நமிடம் நன்கு கிளறி
விட்டு வேக வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து 1 நிமிடம் வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த மசாலாவை சேர்த்து, அதோடு மல்லித் தூள்
சேர்த்து கிளறி, தேவையான அளவு சுடுநீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 15
நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.
* சிக்கன் நன்கு வெந்து, கிரேவி பதத்திற்கு வந்ததும், அதில்
கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான மற்றும் காரசாரமான
சிக்கன் கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications
