Latest Updates
-
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
கடகத்தில் குரு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள கஜகேசரி ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்..
காரசாரமான... சிக்கன் குடைமிளகாய் கிரேவி
சப்பாத்திக்கு அட்டகாசமான சுவையைக் கொண்ட ஒரு சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? சிக்கன் செய்ய தயாராக உள்ளீர்களா? அப்படியானால் சிக்கன் குடைமிளகாய் கிரேவி செய்யுங்கள்.
உங்கள் வீட்டில் இன்று இரவு சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அந்த சப்பாத்திக்கு அட்டகாசமான சுவையைக் கொண்ட ஒரு சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? சிக்கன் செய்ய தயாராக உள்ளீர்களா? அப்படியானால் சிக்கன் குடைமிளகாய் கிரேவி செய்யுங்கள். இந்த கிரேவி சப்பாத்திக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த கிரேவியானது வேலை முடிந்து வீட்டிற்கு வருவோர், வேகமாக செய்யும் வகையில் இருக்கும். குறிப்பாக இந்த கிரேவி பெரியோர்கள் மட்டுமின்றி, குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு சிக்கன் குடைமிளகாய் கிரேவி எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் குடைமிளகாய் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மசாலாவிற்கு...
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* தக்காளி - 3 (நறுக்கியது)
* குடைமிளகாய் - 2 (நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி சாஸ் - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
வேக வைப்பதற்கு...
* சிக்கன் - 1 கிலோ
* கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு மஞ்சள் தூள் சேர்த்து கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் சிக்கனைப் போட்டு, அத்துடன் மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறி, குக்கரை மூடி, மிதமான தீயில் வைத்து 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்கி, பின் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 5-10 நிமிடம் வதக்கி, பின் கரம் மசாலா, தக்காளி சாஸ், மல்லித் தூள், மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நன்கு எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து குக்கரில் உள்ள வேக வைத்துள்ள சிக்கனை நீருடன் ஊற்றி கிளறி, வேண்டுமானால் சிறிது நீரை ஊற்றி, மிதமான தீயில் வைத்து 15 நிமிடம் வேக வைத்து, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான சிக்கன் குடைமிளகாய் கிரேவி தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
