Latest Updates
-
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...!
10 பல் பூண்டும், சின்ன வெங்காயமும் இருந்தா போதும்... சுவையான செட்டிநாடு குழம்பு செய்யலாம்... ட்ரை பண்ணுங்க...!
Chettinadu Poondu Kara Kulambu Recipe in Tamil: பெரும்பாலான வீடுகளில் சாம்பார் அல்லது புளிகுழம்புதான் தினமும் மதியம் பிரதான குழம்பாக இருக்கும். ஒரே மாதிரியான புளிக்குழம்பு, சாம்பார் செய்வது சாப்பிடுபவர்களுக்கு மட்டுமின்றி சமைப்பவர்களுக்கும் நாளடைவில் போரடித்து விடும். அப்படியானால் ஒரு நாள் செட்டிநாடு ரெசிபிக்களை முயற்சி செய்யுங்கள். குறிப்பாக செட்டிநாடு ஸ்டைல் பூண்டு கார குழம்பை முயற்சி செய்து பாருங்கள். ஏனெனில் பூண்டு என்பது அனைத்து சமையலறைகளிலும் இருக்கும் ஒரு அத்தியாவசிய பொருளாகும்.
சின்ன வெங்காயமும், பூண்டும் சேர்ந்து செய்யும் இந்த செட்டிநாடு ஸ்டைல் கார குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். உங்களுக்கு செட்டிநாடு ஸ்டைல் பூண்டு கார குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அதற்கான ரெசிபியை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப்பொருட்கள்:
- சின்ன வெங்காயம் - 15
- பூண்டுப்பல் - 10
- தக்காளி - 1
- புளி - ஒரு எலுமிச்சம் பழ அளவு
- மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க:
- காய்ந்த மிளகாய் - 4 அல்லது 5
- தனியா - 1 டீஸ்பூன்
- மிளகு - 1/2 டீஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- வெந்தயம் - கால் டீஸ்பூன்
- கச கசா - 1 டீஸ்பூன்
- இஞ்சி - ஒரு சிறு துண்டு
தாளிக்க:
- நல்லெண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
- கடுகு - 1/2 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
- பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
- புளியை தண்ணீரில் ஊற வைத்து, 2 கப் அளவிற்கு புளி தண்ணீரை ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ளவும்.
- வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தோலுரித்து வைத்துக் கொள்ளவும். தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, வறுத்தரைக்க கொடுத்துள்ள பொருட்களை, தனித்தனியாக சிவக்க வறுத்தெடுத்து, நன்கு ஆறியதும், பொடியாக அரைத்தெடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் அடி கனமான ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணை காய்ந்ததும் அதில் கடுகு போட்டு, அது வெடித்தவுடன், உளுத்தம் பருப்பைப் போட்டு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- பின் அதில் பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.
- பின்னர் அதில் நறுக்கிய தக்காளித் துண்டுகளையும், உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றையும் சேர்த்து, தக்காளி நன்றாக மசியும் வரை வதக்கவும்.
- பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள விழுதினைச் சேர்த்துக் கிளறி, தேவையான அளவு தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும்.
- குழம்பு கொதித்து வரும் பொழுது, புளித்தண்ணீரைச் சேர்த்து, நன்றாகக் கலக்கி மீண்டும் கொதிக்க விடவும்.
- குழம்பு மீண்டும் கொதித்து, சற்று கெட்டியானவுடன், இறக்கி வைக்கவும். இஞ்சி, பூண்டு சேர்க்கப்பட்ட இந்த காரக் குழம்பு சுவையானது மற்றும் குளிர் காலத்திற்கு மிகவும் ஏற்றது.



Click it and Unblock the Notifications











