Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
செட்டிநாடு வெஜிடேபிள் குருமா
இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டிருந்தால், அதற்கு சைடு டிஷ்ஷாக குருமா இருந்தால் நன்றாக இருக்கும். அதுவும் செட்டிநாடு வெஜிடேபிள் குருமா செய்தால் இன்னமும் அட்டகாசமாக இருக்கும் அல்லவா?
நீங்கள் செட்டிநாடு ரெசிபிக்களை விரும்பி சாப்பிடுபவரா? உங்கள் வீட்டிலும் செட்டிநாடு ஸ்டைலில் சமைக்க விரும்புகிறீர்களா? இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டிருந்தால், அதற்கு சைடு டிஷ்ஷாக குருமா இருந்தால் நன்றாக இருக்கும். அதுவும் செட்டிநாடு வெஜிடேபிள் குருமா செய்தால் இன்னமும் அட்டகாசமாக இருக்கும் அல்லவா?

ஆகவே தான் தமிழ் போல்ட் ஸ்கை உங்களுக்காக செட்டிநாடு வெஜிடேபிள் குருமாவை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளது. இந்த குருமா செய்வது மிகவும் சுலபம். ஏன் பேச்சுலர்கள் கூட இதை செய்யலாம். இப்போது செட்டிநாடு வெஜிடேபிள் குருமாவின் எளிய செய்முறையைக் காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காய்கறிகள் (கேரட், பீன்ஸ், பட்டாணி) - 1 1/2 கப்
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தேங்காய் பால் - 400 மிலி
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 3 டீஸ்பூன்
* சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கிராம்பு - 4
* ஏலக்காய் - 3
* பட்டை - 1 துண்டு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்த தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் வெங்காயத்தை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் காய்கறிகளை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகப் பொடி, மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து மீண்டும் நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் ஒரு கப் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 7-8 நிமிடம் காய்கறிகள் வேகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* காய்கறிகள் நன்கு வெந்ததும், அதில் தேங்காய் பாலை சேர்த்து கிளறி, குறைவான தீயில் ஒரு கொதி விட்டு இறக்கினால், செட்டிநாடு வெஜிடேபிள் குருமா தயார்.
Image Courtesy: ticklingpalates



Click it and Unblock the Notifications
