Latest Updates
-
முட்டை குழம்பை இந்த பக்குவத்துல செய்யுங்க.. மட்டன் குழம்பு ருசியில செமயா இருக்கும்.. -
உங்க கல்லீரலில் பிரச்சனை வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 3 காற்கறிகளை வாரந்தோறும் சாப்பிடுங்க.. -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
பாபா வங்காவின் கணிப்புப்படி பெட்ரோல் விலையில் என்னென்ன மாற்றம் வரப்போகிறது தெரியுமா? -
சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் 22 முதல் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 6 ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும்
செஃப் தீனா பகிரும் செட்டிநாடு பேமஸ் உக்கரை ரெசிபி
Chettinad Ukkarai Recipe in Tamil: தமிழர்களின் உணவுகளுக்கென்று நீண்ட பாரம்பரியமும், வரலாறும் உள்ளது. தமிழ்நாட்டின் சில ஊர்கள் அவற்றின் தனித்துவமான உணவுகளுக்காக புகழ்பெற்றவையாக இருக்கும். அந்த வகையில் செட்டிநாடு உணவுகளுக்கென்று உலகம் முழுவதும் நற்பெயர் உள்ளது. பொதுவாக செட்டிநாடு உணவுகள் என்றாலே காரசாரமான அசைவ உணவுகள் என்றுதான் நாம் நினைப்போம். ஆனால் செட்டிநாடு உணவுகளில் பல தனித்துவமான இனிப்புகளும் உள்ளன.
செட்டிநாடு இனிப்புகளில் உக்கரை என்ற ஸ்பெஷல் இனிப்பு உள்ளது. இதைப்பற்றி அவ்வளவாக நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ஏனெனில் இது எந்த உணவகங்களிலும் கிடைக்காது. இதை நாம் வீட்டில்தான் செய்து சாப்பிட வேண்டும். பாதி சர்க்கரைப் பொங்கல், பாதி கேசரி போல இருக்கும் இந்த இனிப்பு அனைவருக்கும் பிடித்த சுவையில் இருக்கும். ஒருமுறை இந்த இனிப்பை செய்துவிட்டால் அடிக்கடி இதை நீங்களே செய்வீர்கள். தமிழர் பாரம்பரிய இனிப்புகளில் ஒன்றான இதை நிச்சயம் உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள். பிரபல சமையல் கலை நிபுணரான தீனா இத உக்கரை ரெசிபியை பகிர்ந்திருக்கிறார்.

உங்களுக்கு செட்டிநாடு உக்கரையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு உக்கரையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- ¼ கப் பாசிப்பருப்பு
- 2 ஸ்பூன் ரவை
- 2 ஸ்பூன் அரிசி மாவு
- 1 மூடி துருவிய தேங்காய்
- அரை ஸ்பூன் ஏலக்காய் தூள்
- ஒரு சிட்டிகை உப்பு
- 10 உடைத்த முந்திரி
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 4 ஸ்பூன் நெய்
- தேவையான அளவு தண்ணீர்
வெல்லப்பாகு செய்ய:
- அரை கப் பொடித்த வெல்லம்
- தண்ணீர் தேவையான அளவு
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து, வெல்லம் முழுமையாகக் கரையும் வரை விடவும். பின்னர் அதை எடுத்துத் தனியே வைக்கவும்.
- ஒரு கடாயில் 2 ஸ்பூன் நெய்யை சூடாக்கி, உடைத்த முந்திரிப் பருப்பைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி, தனியாக எடுத்து வைக்கவும்.
- பின்னர் பாசிப்பருப்பைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். அதில் 2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
- பருப்பு நன்றாக வேகும் வரை கொதிக்க வைக்கவும். பருப்பு முழுமையாகத் தெரிந்தாலும், எளிதில் மசியக்கூடிய பதம் வரும்வரை வேகவிடவும்.
இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி, தனியாக வைக்கவும். தண்ணீர் மிச்சமிருந்தால் அதை அதையும் தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு கடாயில் 2 ஸ்பூன் நெய்யைச் சூடாக்கி, ரவையைச் சேர்த்து ஒரு நிமிடம் வறுக்கவும். பின்னர் அரிசி மாவைச் சேர்த்து ஒரு நிமிடம் வறுக்கவும்.
- பின்னர் துருவிய தேங்காயை சேர்த்து, ஒரு நிமிடம் வறுக்கவும். பின்னர், சமைத்த பருப்பைச் சேர்த்து நன்கு கலக்கவும்; பிறகு, மாவும் ரவையும் வேகும் வகையில் ½ கப் தண்ணீர் சேர்க்கவும், பருப்பு வேகவைத்த தண்ணீர் இருந்தால் அதை சேர்த்து வேக வைக்கவும்.
- கலவை கெட்டியாகும் வரை வேக வைக்கவும். பின்னர் வெல்லப் பாகைச் சேர்த்து நன்றாக கிளறவும்.
- கலவை ஒன்றுதிரண்டு வரும் வரை நன்றாக கிளறவும். இப்போது ஏலக்காய் தூள், ஒரு சிட்டிகை உப்பு மற்றும் வறுத்த முந்திரிப் பருப்புகளைச் சேர்க்கவும். அனைத்தையும் நன்றாகக் கலக்கவும்.
- அவ்வளவுதான் சூப்பரான செட்டிநாடு உக்கரை தயார்.



Click it and Unblock the Notifications