Latest Updates
-
நீர் தோசையும், தண்ணி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 25 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கவலைகளும், தோல்வியும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் 25-ல் சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேது-சூரிய சேர்க்கையால் அடுத்த 24 நாட்கள் இந்த 3 ராசிக்கு வாழ்க்கை நரகமா இருக்கும்.. -
மணத்தக்காளி கீரை கடையல் ரெசிபி - கீரையை இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இதுல உங்களுக்கு பிடிச்ச பழம் என்னன்னு சொல்லுங்க.. உங்களோட பலம் என்னன்னு சொல்றோம்.. -
ஒரு மணி நேரம் ஏன் 60 நிமிடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது? 100 நிமிடமாக என் பிரிக்கப்படவில்லை தெரியுமா? -
யாரும் பேசாத குடும்ப நல்வாழ்வு போக்கு: நிதித் தயார்நிலை -
September Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
செப்டம்பர் மாதத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 துரதிர்ஷ்டமான ராசிகள் என்னென்ன தெரியுமா?
மொறுமொறுப்பான... செட்டிநாடு ஸ்டைல் புடலங்காய் வடை செய்வது எப்படி?
Chettinad Style Podalangai Vadai: இன்று மாலை உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஒரு அற்புதமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? ஆனால் என்ன செய்வதென்று தெரியவில்லையா? உங்கள் வீட்டில் புடலங்காய் உள்ளதா? உங்கள் வீட்டில் இருப்போர் வடைகளை விரும்பி சாப்பிடுவார்களா?
அப்படியானால் அந்த புடலங்காய் கொண்டு செட்டிநாடு ஸ்டைலில் புடலங்காய் வடை செய்து கொடுங்கள். இந்த புடலங்காய் வடை செய்வது மிகவும் சுலபம் மற்றும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு ஸ்டைல் புடலங்காய் வடை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு ஸ்டைல் புடலங்காய் வடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலைப் பருப்பு - 1 கப்
* பாசிப் பருப்பு - 1/4 கப்
* வரமிளகாய் - 3-4
* இஞ்சி - 1 இன்ச்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 2-3
* புடலங்காய் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2-3 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் கடலைப் பருப்பு, பாசிப் பருப்பை நன்கு கழுவி, அத்துடன்
வரமிளகாய் சேர்த்து 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* 2 மணிநேரம் கழித்து, மிக்சர் ஜாரில் ஊற வைத்துள்ள பருப்பு மற்றும்
வரமிளகாயைப் போட்டு நீர் சேர்க்காமல் கொரகொரவென்று அரைக்க
வேண்டும்.
* பின்பு பொடியாக நறுக்கிய புடலங்காயை ஒரு பாத்திரத்தில் எடுத்து,
அதில் சிறிது உப்பு தூவி நன்கு பிரட்டி, 10 நிமிடம் அப்படியே ஊற வைக்க
வேண்டும். இதனால் புடலங்காயில் உள்ள அதிகப்படியான நீர்
வெளியேறிவிடும்.
* அதே சமயம் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சோம்பு, பட்டை,
கிராம்பு சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் இஞ்சியை சேர்த்து சிறிது
நீரை ஊற்றி மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு பெரிய பாத்திரத்தில் அரைத்த கடலைப் பருப்பு கலவை,
புடலங்காய், இஞ்சி பேஸ்ட், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்,
கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு
பிசைந்து கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ளதை சிறிது எடுத்து
வடை போன்று தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க
வேண்டும். இதேப் போன்று அனைத்தையும் வடைகளாக தட்டிப் போட்டு பொரித்து
எடுத்தால், சுவையான செட்டிநாடு ஸ்டைல் புடலங்காய் வடை தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications