Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
அடுத்தமுறை பன்னீரை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் செய்யுங்க.. டேஸ்டியா இருக்கும்..
Chettinad Paneer Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தியை செய்வீர்களா? அதுவும் அதற்கு சைடு டிஷ்ஷாக பன்னீரை சமைப்பீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான சுவையில் தான் பன்னீரை சமைப்பீர்களா? அப்படியானால் அடுத்தமுறை பன்னீரை செட்டிநாடு ஸ்டைலில் செய்யுங்கள்.
இந்த செட்டிநாடு பன்னீர் சப்பாத்தி, பூரி ஆகியவற்றுடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு பன்னீரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு பன்னீர் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 300 கிராம்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
வதக்கி அரைப்பதற்கு...
* வரமிளகாய் - 5-6
* மல்லி விதை - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கிராம்பு - 3
* பட்டை - 1 இன்ச் துண்டு
* மிளகு - 5-6
* துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, சோம்பு,
கிராம்பு, பட்டை, வரமிளகாய், மிளகு, தேங்காய் ஆகியவற்றை சேர்த்து நல்ல
மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் வறுத்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பன்னீர் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக
வறுத்து, வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்க வேண்டும்.
* பின் அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பின்பு தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து மசாலா, சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள்
ஆகியவற்றை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்கி, தேவையான அளவு நீரை
ஊற்றி பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக ஊற வைத்துள்ள பன்னீர் துண்டுகளை எடுத்து, அதில் உள்ள
அதிகப்படியான நீரைப் பிழிந்துவிட்டு, கொதித்துக் கொண்டிருக்கும்
மசாலாவில் சேர்த்து கிளறி, 2 நிமிடம் வேக வைத்து, மேலே கொத்தமல்லியைத்
தூவி இறக்கினால், சுவையான செட்டிநாடு பன்னீர் தயார்.
Image Courtesy: naliniscooking



Click it and Unblock the Notifications











