Latest Updates
-
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்..
செட்டிநாடு பெப்பர் காளான் ரெசிபி... இட்லி, தோசைக்கு சட்னி, சாம்பாரை விட இது பக்காவாக இருக்கும்..ட்ரை பண்ணுங்க!
Chettinad Mushroom Pepper Masala Recipe in Tamil: செட்டிநாடு என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது சுவையான உணவுகள்தான். செட்டிநாடு உணவுகள் என்றாலே அவை சுவையாக இருக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே ஆழமாக உள்ளது. இப்போது மழை தொடர்ந்து பெய்து வருவதால் ஆரோக்கியமாக சாப்பிட வேண்டியது அவசியம், ஆரோக்கியமான உணவுகள் சுவையாகவும் இருப்பது கூடுதல் நன்மையாகும்.
சிக்கன், மட்டனுக்கு பிறகு மக்கள் அதிகம் விரும்பும் ஒரு பொருள் என்றால் அது காளான்தான். பல்வேறு ஆரோக்கிய குணங்கள் நிறைந்த காளானை செட்டிநாடு ஸ்டைலில் மசாலா செய்து சாப்பிடுவது ஆரோக்கியத்துடன் சுவையையும் கொடுக்கும். இந்த செட்டிநாடு காளான் மிளகு மசாலா இட்லி, தோசை, சப்பாத்தி ஏன் சாதத்திற்கும் கூட பக்காவாக இருக்கும். இந்த சூப்பரான செட்டிநாட்டு காளான்மிளகு மசாலாவை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருள்கள்:
- காளான் - 200 கிராம்
- பெரிய வெங்காயம் - 1
- சீரகம் - 1/2 ஸ்பூன்
- எண்ணெய் 50 மில்லி
அரைப்பதற்கு:
- தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்
- வர மிளகாய் - 5
- மல்லி விதை - 2 ஸ்பூன்
- சோம்பு - 1 ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- மிளகு - 2 ஸ்பூன்
- ஏலக்காய் - 2
- அன்னாசிப்பூ - 1
- பட்டை - 2
- கிராம்பு 2
வதக்கி அரைக்க:
- சின்னவெங்காயம் - 10 முதல் 15
- தக்காளி - 2
- இஞ்சி - 1 துண்டு
- பூண்டு - 10 பல்
செய்முறை:
- முதலில் துருவிய தேங்காயை பொன்னிறமாக வறுக்கவும். அதன்பின் 1/2 ஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து, ஆறிய பின்னர் தண்ணீர் சேர்த்து மசிய அரைக்கவும்
- பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு வதக்கி ஆற வைத்து அரைக்கவும்.
- மசாலாவை செய்ய கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு அதன்பின் நறுக்கி பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக நன்கு வதங்கியதும் அரைத்த வெங்காய விழுது சேர்த்து வதக்கவும்.
- தக்காளி, வெங்காயத்தின் பச்சை வாசனை போனவுடன் அரைத்து வாய்த்த மசாலாவை சேர்க்கவும்.
- அதன்பின் தேவையான அளவு உப்பு சேர்க்கவும் நன்கு கொதிக்க விடவும். மசாலா நன்கு வந்ததும் நறுக்கி வைத்த காளானை சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து கொதிக்க விடவும்.
- நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான செட்டிநாடு மஷ்ரூம் கிரேவி தயார். இது மழை நேரத்தில் இட்லி, தோசையுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications
