Latest Updates
-
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க..
செட்டிநாடு காளான் மசாலா
உங்கள் வீட்டில் உள்ளோர் காளானை விரும்பி சாப்பிடுவார்களா? அதுவும் செட்டிநாடு ரெசிபிக்களை விரும்புவார்களா? அப்படியானால் இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்வதாக இருந்தால், செட்டிநாடு காளான் மசாலாவை செய்து சாப்பிடுங்கள்.
உங்கள் வீட்டில் உள்ளோர் காளானை விரும்பி சாப்பிடுவார்களா? அதுவும் செட்டிநாடு ரெசிபிக்களை விரும்புவார்களா? அப்படியானால் இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்வதாக இருந்தால், செட்டிநாடு காளான் மசாலாவை செய்து சாப்பிடுங்கள். இந்த காளான் மசாலா செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இந்த காளான் மசாலா சப்பாத்திக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு காளான் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு காளான் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காளான் - 2 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
* புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன் (அல்லது) தக்காளி - 1
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* கடுகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
மசாலா பொடிக்கு...
* மிளகு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* மல்லி விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 2-3
* பூண்டு - 2 பல்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 'மசாலா பொடிக்கு' கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் காளானை நன்கு சுத்தம் செய்து, நீளவாக்கி வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் காளானை சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்க வேண்டும். நீரை சேர்க்காதீர்கள். ஏனெனில் காளானில் இருந்தே அது வேக தேவையான நீர் வெளியேறும்.
* அடுத்து, அதில் தக்காளி/புளிச்சாறு சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து சில நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி, சில நிமிடங்கள் கொதிக்க விட்டு, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், செட்டிநாடு காளான் மசாலா தயார்.
Image Courtesy: cookspan



Click it and Unblock the Notifications

