Latest Updates
-
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
Crispy Rava Potato Balls Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் உங்கள் பிள்ளைகளின் பசியை போக்கும் வகையில் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் ரவையும், உருளைக்கிழங்கும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு மொறுமொறுவென்று உருளைக்கிழங்கு ரவா பால்ஸ் செய்து கொடுங்கள். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு அட்டகாசமான சுவையில் இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு இந்த ரவா உருளைக்கிழங்கு பால்ஸ் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா உருளைக்கிழங்கு பால்ஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்து என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* உருளைக்கிழங்கு - 1 (வேக வைத்தது)
* தண்ணீர் - 1 கப்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சில்லி ப்ளேக்ஸ் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* நெய் - 1 ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* ரவை - 1/2 கப்
* சோள மாவு - 1/4 கப்
* பிரட் தூள் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு, நீரை ஊற்றி, அடுப்பில்
வைத்து, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, உருளைக்கிழங்கின் தோலை
நீக்கிவிட்டு, மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீரை ஊற்றி,
அத்துடன் சீரகம், சில்லி ப்ளேக்ஸ், சுவைக்கேற்ப உப்பு மற்றும் நெய்
சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள் மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்கு
கொதிக்க வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் ரவையை சேர்த்து கட்டிகளின்றி நன்கு கிளறி இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு
சப்பாத்தி மாவு பதத்திற்கு வரும் வரை பிசைந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து கொஞ்சம் கொஞ்சமாக மாவை எடுத்து உருட்டிக் கொள்ள
வேண்டும்.
* பின் சோள மாவை நீர் சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு உருட்டி வைத்துள்ள உருண்டையை எடுத்து சோள மாவு நீரில்
நனைத்து, பின் பிரட் தூளில் பிரட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உருண்டைகளை சேர்த்து குறைவான தீயில்
வைத்து, பொன்னிறமாக ப்ரை செய்து எடுத்தால், சுவையான ரவா
உருளைக்கிழங்கு பால்ஸ் தயார்.



Click it and Unblock the Notifications
