Latest Updates
-
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது
இட்லி, தோசைக்கு பதில் இந்த செட்டிநாடு அடை தோசையை செஞ்சு பாருங்க... வீட்ல எல்லாரும் அசந்து போயிருவாங்க...!
Chettinad Adai Dosa Recipe in Tamil: தினசரி இட்லி தோசை என்றாகிவிட்ட நம் காலகட்டத்தில் தோசையை சலிக்காமல் சாப்பிடுபவர்களும் உண்டு. இன்றைக்கும் தோசையா என சலித்து கொள்பவர்களும் உண்டு. சிலர் சிறுதானியத்தில் இட்லி தோசை செய்து சுவையை மாற்றி குடும்ப ஆரோக்கியத்தை மேம்படுத்த முயற்சிப்பார்கள். ஆனால் நம் சிறுவயதில் அம்மா செய்து தந்த போது சாப்பிட்ட அடை தோசையை மறந்துவிடுகிறார்கள்.
என்ன தான் நாம் வீட்டில் சமைத்தாலும் கடைகளில் கிடைக்கும் உணவுகளை விரும்புவோம். அதிலும் செட்டிநாட்டு உணவு வகைகளுக்கு தனி இடம் தான். நாம் இங்கு எப்படி செட்டிநாட்டு அடை செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
அரைக்க:
- பச்சரிசி - ½ கப்
- புழுங்கல் அரிசி அல்லது இட்லி அரிசி - ½ கப்
- துவரம்பருப்பு - ½ கப்
- கடலைப்பருப்பு - ½ கப்
- பாசிப்பருப்பு - ½ கப்
- உளுந்தம் பருப்பு - ½ கப்
- வரமிளகாய் - 6-7
- சோம்பு - ½ டீ ஸ்பூன்
- தேங்காய் - ½ மூடி
அரைத்த பின் சேர்க்க:
- சின்ன வெங்காயம் - 15-20
- பெருங்காயம் - ¼ டீ ஸ்பூன்
- கருவேப்பிலை - சிறிதளவு
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் அரை கப் பச்சரிசி மற்றும் அரை கப் புழுங்கல்
அரிசி சேர்க்கவும்.
- புழுங்கல் அரிசிக்கு பதில் நீங்கள் வீட்டில் சாதம் செய்யும்
அரிசியையும் பயன்படுத்தி கொள்ளலாம்.
- அதனுடன் துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, மற்றும்
உளுந்தம் பருப்பு சேர்த்து கொள்ளவும்.
- அதில் தண்ணீர் சேர்த்து 2 முதல் 3 முறை நன்றாக அலசி சுத்தம் செய்து
கொள்ளவும்.
- பின் அதில் ஊற வைக்க தேவையான தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
- அதனுடன் வரமிளகாய் மற்றும் சோம்பு சேர்த்து 2 முதல் 3 மணி
நேரத்திற்கு ஊற வைக்கவும்.
- சின்ன வெங்காயத்தை தோல் உரித்து சுத்தம் செய்து நறுக்கி
கொள்ளவும்.
- சின்ன வெங்காயம் இல்லை என்றால் பெரிய வெங்காயம் சேர்த்து
கொள்ளலாம்.
- பின் தேங்காயை நறுக்கியோ அல்லது துருவியோ எடுத்து கொள்ளவும்.
- ஊற வைத்த தண்ணீரை வடிகட்டிவிட்டு தேங்காய் சேர்த்து தோசை மாவு
பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
- அதனுடன் பெருங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 2 மணி
நேரத்திற்கு புளிக்க விடவும்.
- புளிக்க வைக்காமல் நேரடியாகவும் பயன்படுத்தலாம்.
- மாவுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கருவேப்பிலை, மற்றும்
வெங்காயம் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- உங்களுக்கு வேண்டுமானால் பொடியாக நறுக்கிய தேங்காய் சேர்த்து கலந்து
கொள்ளலாம்.
- தோசை கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் தோசை ஊற்றி எண்ணெய்
சேர்த்து வேகவிடவும்.
- ஒருபுறம் வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்தால் சுவையான
செட்டிநாட்டு தோசை தோசை தயார்.



Click it and Unblock the Notifications