Latest Updates
-
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
கடகத்தில் குரு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள கஜகேசரி ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க
மணமணக்கும்.. ருசியான.. சென்னை ஸ்டைல் மீன் குழம்பு
Chennai Style Fish Curry: நீங்கள் மீன் பிரியரா? அடிக்கடி மீன் வாங்கி வீட்டில் சமைப்பீர்களா? எப்போதும் ஒரே மாதிரி தான் மீன் குழம்பை வைப்பீர்களா? அப்படியானால் அடுத்தமுறை மீன் வாங்கினால், சென்னை ஸ்டைல் மீன் குழம்பு செய்யுங்கள்.
இந்த மீன் குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். அதுவும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

உங்களுக்கு சென்னை ஸ்டைல் மீன் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சென்னை ஸ்டைல் மீன் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* மீன் - 1/2 கிலோ
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
மசாலாவிற்கு...
* எண்ணெய் - 1/4 கப்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - சிறிது
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பெரிய தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 3 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
* புளி - 1 சிறிய நெல்லிக்காய் அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மீனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள், மஞ்சுள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து நன்கு பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு புளியை நீரில் போட்டு ஊற வைத்து, அதை பிசைந்து வடிகட்டி சாறு
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலி அல்லது மண் சட்டியை அடுப்பில் வைத்து, அதில்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம், வரமிளகாய், கறிவேப்பிலை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது
உப்பு தூவி நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள்,
மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி, சிறிது தெளித்து ஊற்றி, நன்கு
எண்ணெய் பிரிய வதக்க வேண்டும்.
* பின்பு அதில் புளிச்சாற்றினை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து,
தேவையான அளவு நீரை ஊற்றி, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* குழம்பு நன்கு கொதித்ததும், ஊற வைத்துள்ள மீனை சேர்த்து மீண்டும்
குறைவான தீயில் வைத்து 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, மேலே
கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையைத் தூவினால் சுவையான சென்னை ஸ்டைல்
மீன் குழம்பு தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
