Latest Updates
-
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
மொறுமொறுப்பான... சீஸி உருளைக்கிழங்கு ஸ்டிக்
இன்று வீட்டில் உள்ளோருக்கு வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க தயாராக இருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கு உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு சீஸை உருளைக்கிழங்கு ஸ்டிக் செய்து கொடுங்கள்.
மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் ஸ்நாக்ஸ் ஏதாவது செய்து கொடுக்க கேட்கிறார்களா? நீங்கள் அடிக்கடி பஜ்ஜி, போண்டா, வடை என்று தான் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுப்பீர்களா? இன்று ஒரு வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க தயாராக இருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கு உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு சீஸை உருளைக்கிழங்கு ஸ்டிக் செய்து கொடுங்கள்.
இந்த சீஸி உருளைக்கிழங்கு ஸ்டிக் ரெசிபியை இதுவரை நீங்கள் கடைகளில் தான் வாங்கி சுவைத்திருப்பீர்கள். ஆனால் இதை வீட்டிலேயே எளிய முறையில் தேவையான அளவு செய்து சாப்பிடலாம். முக்கியமாக உருளைக்கிழங்கு பிரியர்களுக்கு இது ரொம்பவும் பிடிக்கும். மேலும் இது மாலை வேளையில் ஒருவரது பசியையும் தணிக்கும்.

உங்களுக்கு சீஸி உருளைக்கிழங்கு ஸ்டிக் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சீஸி உருளைக்கிழங்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பெரிய உருளைக்கிழங்கு - 2
* சீஸ் - 3 டேபிள் ஸ்பூன் (துருவியது)
* ஆரிகனோ - 1 டீஸ்பூன்
* சில்லி ப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* பூண்டு பொடி - 1 டீஸ்பூன்
* சோள மாவு - 1/2 கப்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் ஆரிகனோ, சில்லி ப்ளேக்ஸ், சுவைக்கேற்ப உப்பு மற்றும் பூண்டு பொடி அல்லது துருவிய பூண்டு சேர்த்து கையால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் சோள மாவை சேர்த்து நன்கு மாவு பதத்திற்கு பிசைய வேண்டும்.
* அடுத்து ஒரு பார்ச்மெண்ட் பேப்பரை எடுத்து விரித்து, அதன் மேல் பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மாவை வைத்து, அதன் மேல் மற்றொரு பார்ச்மெண்ட் பேப்பரை வைத்து, பூரிக் கட்டைக் கொண்டு தட்டையாக சதுரமாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை ஃப்ரீசரில் 20-30 நிமிடம் வைத்து, பின் அதை வெளியே எடுக்க வேண்டும்.
* பின்பு பார்ச்மெண்ட் பேப்பரை நீக்கிவிட்டு, கத்தியால் நீள நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், துண்டுகளாக்கி வைக்கப்பட்டுள்ளதைப் போட்டு பொன்னிமாக பொரித்து எடுத்தால், சுவையான மற்றும் மொறுமொறுப்பான சீஸி உருளைக்கிழங்கு ஸ்டிக் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications