Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
சப்பாத்திக்கு டக்குன்னு 15 நிமிடத்தில் ஒரு சைடு டிஷ் செய்யணுமா? அப்ப இந்த குருமாவை செய்யுங்க...
Simple Chapathi Kurma In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான சைடு டிஷ் செய்வீர்களா? இப்படி ஒரே மாதிரி செய்து உங்களுக்கு போரடித்துவிட்டதா? சற்று வாய்க்கு விருந்தளிக்கும் வகையில் ருசியாக சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் காய்கறிகள் உள்ளதா? அப்படியானால் அந்த காய்கறிகளைக் கொண்டு குருமா செய்யுங்கள். இந்த குருமாவை வெறும் 15 நிமிடத்தில் செய்துவிடலாம். முக்கியமாக இது சப்பாத்தியுடன் மட்டுமின்றி, பூரி, பரோட்டா, நாண் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

உங்களுக்கு சப்பாத்தி குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சப்பாத்தி குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 2
* கல்பாசி - 1 துண்டு
* ஏலக்காய் - 2
* பிரியாணி இலை - 1
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* கேரட் - 1 (நறுக்கியது)
* பீன்ஸ் - 5 (நறுக்கியது)
* பெரிய உருளைக்கிழங்கு - 1 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு...
* தேங்காய் - 1 கைப்பிடி
* முந்திரி - 10
* சோம்பு - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி, பிரியாணி இலை, சோம்பு
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, மஞ்சள் தூள்
சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு ஆகிய
காய்கறிகளை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி கிளறி, மூடி வைத்து
குறைவான தீயில் வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் தேங்காய், முந்திரி, சோம்பு சேர்த்து
ஒருமுறை அரைத்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, அதில் மல்லித் தூள், மிளகாய் தூள், கரம்
மசாலா சேர்த்து 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின்பு அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து கிளறி,
குருமாவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி, உப்பு சுவை பார்த்து,
வேண்டுமானால் உப்பை சேர்த்து கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் பச்சை
வாசனை போக கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான
வெஜ் குருமா தயார்.



Click it and Unblock the Notifications