Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
சப்பாத்தி குருமாவை ஒருமுறை இப்படி ட்ரை பண்ணுங்க.. வீட்டுல இருக்குறவங்க கணக்கில்லாம சாப்பிடுவாங்க..
Chapathi Kurma Recipe In Tamil: இன்று இரவு வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? ஆனால் அந்த சப்பாத்திக்கு சைடு டிஷ் செய்ய உங்கள் வீட்டில் காய்கறிகள் ஏதும் இல்லையா? வெறும் வெங்காயமும், தக்காளியும் தான் உள்ளதா? அப்படியானால் அந்த இரண்டைக் கொண்டு ஒரு சுவையான சப்பாத்தி குருமாவை செய்யலாம்.
இந்த சப்பாத்தி குருமாவிற்கு கூடுதலாக பொட்டுக்கடலையை அரைத்து பொடி செய்து சேர்க்க வேண்டும். இது தான் இந்த ரெசிபியின் ஹீரோ. முக்கியமாக இந்த சப்பாத்தி குருமா 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு மிகவும் ஈஸியாக இருக்கும். அதோடு இந்த குருமாவை செய்தால் வீட்டில் உள்ளோர் கணக்கில்லாமல் சப்பாத்தியை சாப்பிடுவார்கள். அந்த அளவில் மிகவும் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு சப்பாத்தி குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சப்பாத்தி குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3 (கீறியது)
* கறிவேப்பிலை - சிறிது
* வெங்காயம் - 2
* தக்காளி - 1
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு...
* பொட்டுக்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை நன்கு பொடியாக நறுக்கிக்
கொள்ள வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் பொட்டுக்கடலை மற்றும் சோம்பு சேர்த்து நன்கு
மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பு சேர்த்து
பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.
* பின் அதில் சோம்பு சேர்த்து தாளித்து, பச்சை மிளகாய், கறிவேப்பிலை
சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின் தக்காளியை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.
* அடுத்து அரைத்து வைத்துள்ள பொட்டுக்கடலை மாவு நீரில் நன்கு
கட்டிகளின்றி கரைத்து, தக்காளி வதங்கிய பின் ஊற்றி கிளறி, உப்பு சுவை
பார்த்து, வேண்டுமானால் சிறிது உப்பு தூவி, தேவையான அளவு நீரையும்
ஊற்றி, 10 நிமிடம் சற்று கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து இறக்கி,
கொத்தமல்லியைத் தூவினால், சப்பாத்தி குருமா தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications