Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
கடலைப்பருப்பு அல்வா
மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு அடிக்கடி ஏதாவது செய்து கொடுப்பீரா? இன்று என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் இன்று கடலைப்பருப்பு அல்வா செய்து கொடுங்கள்.
உங்களுக்கு வித்தியாசமான ரெசிபிக்கள் செய்ய பிடிக்குமா? அதுவும் மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு அடிக்கடி ஏதாவது செய்து கொடுப்பீரா? இன்று என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் இன்று கடலைப்பருப்பு அல்வா செய்து கொடுங்கள். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் அட்டசாகமான ருசியில் இருக்கும். அதோடு இதில் புரோட்டீன் உள்ளதால், குழந்தைகள் சாப்பிடுவதும் நல்லது.

கீழே கடலைப்பருப்பு அல்வா எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலைப்பருப்பு - 1/2 கப்
* நெய் - 1/8 கப்
* சர்க்கரை - 1/2 கப்
* பால் - 1/2 கப் + 1 டேபிள் ஸ்பூன்
* குங்குமப்பூ - சிறிது
* ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
* நறுக்கிய பாதாம் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் கடலைப் பருப்பை நீரில் ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் அதைக் கழுவி, நீரை முற்றிலும் வடிகட்டிவிட்டு, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூவைப் போட்டு ஊற வைத்துக் கொள்ளவும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாதி நெய்யை ஊற்றி, அரைத்து வைத்துள்ள கடலைப்பருப்பைப் போட்டு குறைவான தீயில் கட்டிசேராதவாறு கிளறி விட வேண்டும்.
* அப்படி கிளறும் போது கடலைப் பருப்பின் நிறம் மாறி, அதிலிருந்து வீசும் பச்சை வாசனை போனதும், அதில் குங்குமப்பூ பால் மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு கிளறி சிறிது நேரம் மூடி வைத்து வேக வைக்கவும்.
* பருப்பானது நன்கு மென்மையாக மற்றும் முழுமையாக வெந்ததும், அதில் சர்க்கரையை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அப்படி கிளறும் வேளையில், கலவையானது சற்று கெட்டியாக ஆரம்பிக்கும். அந்நிலையில் மீதமுள்ள நெய்யை ஊற்றி கிளறி விட வேண்டும். அப்போது அந்த கலவை வாணலியில் ஒட்டாமல் அல்வா பதத்திற்கு வர ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் ஏலக்காய் பொடி மற்றும் நறுக்கிய பாதாமை சேர்த்து கிளறி இறக்கினால், கடலைப்பருப்பு அல்வா தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications








