Just In
- 16 min ago
நாம் அதிகம் விரும்பி சாப்பிடும் இந்த உணவுகளில் எவ்வளவு கலோரி இருக்குன்னு தெரியுமா?
- 5 hrs ago
இன்றைய ராசிப்பலன் (03.03.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- 15 hrs ago
ஆரோக்கியத்திற்காக நீங்க சாப்பிடும் இந்த நட்ஸ் வகை உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்...ஜாக்கிரதை!
- 16 hrs ago
இந்த மந்திர வார்த்தைகள் உங்கள் திருமண வாழ்க்கையை அழகாக்குவதோடு அர்த்தமுள்ளதாகவும் மாற்றும்...!
Don't Miss
- Movies
டாப் ஹீரோக்களின் படத்தில் கமிட்டாகும் கார்த்தி பட நடிகை.. முதல் முறையாக அந்த நடிகருடனும் ரொமான்ஸ்!
- News
பாஜக "கேம் பிளான்.." திகுதிகுவென கிளம்பிய தகவல்.. சசிகலா வீட்டுக்கு விரைந்த தினகரன்.. என்ன நடந்தது?
- Automobiles
மீண்டும் ஹிமாலயன் பைக்கிற்கு குவியும் வரவேற்பு!! அதிகரிக்கும் ராயல் என்பீல்டின் விற்பனை!
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தேங்காய் அல்வா
அல்வா என்றதுமே நமக்கு நினைவிற்கு வருவது திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா தான். ஆனால் அல்வாவில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் தேங்காய் அல்வா. உங்கள் வீட்டில் உள்ளோருக்கு மாலை வேளையில் ஒரு இனிப்பு பலகாரம் செய்து கொடுக்க விரும்பினால், அதற்கு தேங்காய் அல்வா சரியான தேர்வாக இருக்கும். மேலும் தேங்காய் அல்வா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையானதாக இருக்கும்.
உங்களுக்கு தேங்காய் அல்வா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் அல்வாவின் ஈஸியான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நற்பதமான துருவிய தேங்காய் - 1 கப்
* கொதிக்க வைத்து குளிர வைத்த பால் - 1 1/4 கப்
* சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 1 டேபிள் ஸ்பூன்
* நெய் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
* பின் துருவிய தேங்காயைப் போட்டு பொன்னிறமாவ வதக்கவும்.
* அதன் பிறகு கொதிக்க வைத்து குளிர வைத்த பாலை ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வைக்கவும்.
* பாலானது சுண்டி நீரின்றி போகும் நிலையில் சர்க்கரையை சேர்த்து தொடர்ந்து கிளறி விடவும். கலவையானது கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருங்கள்.
* பின்பு அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து மீண்டும் கிளறும் போது, அல்வா போன்று எதிலும் ஒட்டாமல் வரும். அப்போது முந்திரி மற்றும் எஞ்சிய நெய்யையும் சேர்த்து கிளறி இறக்கினால், தேங்காய் அல்வா தயார்.
குறிப்பு:
* மற்ற அல்வாக்களைப் போல் இந்த அல்வாவிற்கு அதிக நெய் தேவைப்படாது. மேலே குறிப்பிட்டுள்ளதை விட குறைவாக 2 டேபிள் ஸ்பூன் மட்டும் பயன்படுத்தினாலே போதும்.
* தேங்காயை துருவ முடியாவிட்டாலும் பரவாயில்லை. தேங்காயை துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு அரைத்தும் பயன்படுத்தலாம்.
* நற்பதமான தேங்காயை மட்டும் பயன்படுத்துங்கள்.
* ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொண்டால், சுவை இன்னும் அற்புதமாக இருக்கும்.
* உங்களுக்கு தேவையான இனிப்பு சுவைக்கு ஏற்ப சர்க்கரையை சேர்த்துக் கொள்ளலாம்.