Latest Updates
-
கல்யாண மேடையில் ரத்தக் களரி! வரதட்சணை கேட்டு மணமகன் வீட்டார் செய்த அராஜகம் - அதிர்ச்சியில் உறைந்த விருந்தினர்கள்! -
கிராமத்து ஸ்டைல் சிக்கன் பிரட்டல் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க, செம சைடிஷா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்கள் உலகை ஆட்டிப்படைக்கும் சக்திவாய்ந்தவர்களாக இருப்பார்களாம் -
கிலோ 12000 ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான அரிசி இதுதான் - இதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
வீட்டின் வாஸ்துவை மாற்றும் ரகசியம்! மழைக்காலத்தில் இந்த செடிகள் இருந்தால் அதிர்ஷ்டம் தேடி வரும் -
ஐயங்கார் ஸ்டைல் மிளகு குழம்பு ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமா இருக்கும் -
மே 17-க்கு முன் புதுமனை புகுவிழா நடத்தப்போறீங்களா? செல்வம் பெருக இந்த வாஸ்து ரகசியத்தை மிஸ் பண்ணாதீங்க! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
மல்லி தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 12 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்கணும்
சன்னா பட்டர் மசாலா
இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது நாண் செய்ய நினைக்கிறீர்களா? அதற்கு சைடு டிஷ் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் சன்னா பட்டர் மசாலா செய்யுங்கள்.
இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது நாண் செய்ய நினைக்கிறீர்களா? அதற்கு சைடு டிஷ் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதுவும் வீட்டில் உள்ளோரை அசத்தும் வகையில் சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் சன்னா பட்டர் மசாலா செய்யுங்கள். இது அட்டகாசமான சுவையில் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். குறிப்பாக உங்கள் குழந்தைகளுக்கு இது நிச்சயம் பிடிக்கும்.

இப்போது சன்னா பட்டர் மசாலாவை எப்படி செய்வதென்று காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சன்னா - 1 கப்
* வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் + 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* காய்ச்சிய பால் - 1/4 கப்
* மலாய் க்ரீம் - 1 டேபிள் ஸ்பூன்
* உலர்ந்த வெந்தய கீரை - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
வதக்கி அரைப்பதற்கு...
* வெண்ணெய் - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* தக்காளி - 3 (நறுக்கியது)
* முந்திரி - 6
* பச்சை மிளகாய் - 1
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் சன்னாவை நீரில் குறைந்தது 8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின் அதை நன்கு கழுவி, குக்கரில் போட்டு, அத்துடன் சிறிது உப்பு மற்றும் தேவையான அளவு நீரை ஊற்றி குக்கரை மூடி, அடுப்பில் வைத்து, 5-6 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும். சன்னாவானது நன்கு மென்மையாக வெந்திருக்க வேண்டும். ஒருவேளை வேகவில்லை என்றால் மீண்டும் ஒரு 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் மற்றும் எண்ணெய் சேர்த்து சூடானதும், வதக்கி அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக மென்மையாக வதக்கி இறக்கி குளிர வைக்கவும்.
* பிறகு வதக்கியதை மிக்சர் ஜாரில் போட்டு சிறிது நீர் சேர்த்து மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
* அடுத்து அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், இஞ்சி பூண்டு விழுது, காஷ்மீரி மிளகாய் தூள், சேர்த்து வதக்கி, பின் அரைத்ததை சேர்க்கவும்.
* பின் அதில் மல்லித் தூள் மற்றும் பால் ஊற்றி சில நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
* அதன் பின் வேக வைத்துள்ள சன்னாவை வேக வைத்த நீருடன் ஊற்றி கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
* இறுதியில் கரம் மசாலா, காய்ந்த வெந்தய கீரை, பிரஷ் க்ரீம் சேர்த்து நன்கு கிளறி, குறைவான தீயில் 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, மேலே சிறிது வெண்ணெயைப் போட்டு மூடி வைத்தால், சுவையான சன்னா பட்டர் மசாலா தயார்.
குறிப்பு:
* உங்களுக்கு சற்று இனிப்புச் சுவை வேண்டுமானால், அதில் சிறிது சர்க்கரையை சேர்த்துக் கொள்ளலாம்.
* விருப்பமுள்ளவர்கள் முந்திரியை தனியாக அரைத்து சேர்த்துக் கொள்ளலாம்.
* ஒருவேளை சன்னாவை இரவு நேரத்தில் ஊற வைக்க மறந்துவிட்டால், பகலில் நல்ல சூடான நீரில் சன்னாவைப் போட்டு, 5-6 மணிநேரம் மூடி வைத்து ஊற வையுங்கள்.
* க்ரீம் இல்லாதவர்கள், அதைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
* முந்திரி இல்லாவிட்டால், அதற்கு பதிலாக பாதாமை சேர்த்துக் கொள்ளலாம்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications











