Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
சர்க்கரைவள்ளி கிழங்குடன் இந்த 3 பொருளை சேர்த்து ஈவ்னிங் இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுங்க..
Chakkaravalli Kilangu Pancake Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் பிள்ளைகள் பசியை போக்கும் வகையில் ஒரு அற்புதமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அதுவும் ஆரோக்கியமான ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா?
உங்கள் வீட்டில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு உள்ளதா? ஆனால் உங்கள் பிள்ளைகள் அதை சாப்பிடமாட்டார்களா? அப்படியானால் அந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கைக் கொண்டு பேன்கேக் செய்யுங்கள். இந்த பேன்கேக் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

அதோடு இது குழந்தைகள் கேட்டு விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். ஒருமுறை இப்படி பேன்கேக் செய்து கொடுத்தால், பின் அடிக்கடி இதை செய்து கொடுக்க சொல்வார்கள். இந்த பேன்கேக்கை வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருந்தால், அப்போதும் செய்து கொடுக்கலாம். அது நல்ல பாராட்டை வாங்கித் தரும்.
உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு பேன்கேக்கை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சர்க்கரைவள்ளிக் கிழங்கு பேன்கேக் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 200 கிராம்
* ரவை - 1/2 கப்
* சர்க்கரை - 1/4 கப்
* காய்ச்சிய பால் - 1/2 கப்
* உப்பு - 1 சிட்டிகை
* தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் சர்க்கரைவள்ளிக் கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, அதை
துண்டுகளாக்கி, இட்லி தட்டில் வைத்து, பின் அதை இட்லி பாத்திரத்தினுள்
வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு வேக வைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கை ஒரு பாத்திரத்தில்
எடுத்துக் கொண்டு, கரண்டியால் நன்கு மென்மையாக மசித்து விட
வேண்டும்.
* அதன் பின் அதில் 1/2 கப் ரவையை சேர்க்க வேண்டும்.
* அடுத்து அதில் 1/4 கப் சர்க்கரையை சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் காய்ச்சிய பாலை ஊற்றி, 1 சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு
கலந்து விட வேண்டும்.
* பின் அதை மூடி வைத்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 30 நிமிடம் கழித்து மூடியைத் திறந்தால், ரவை நன்கு ஊறி சற்று
கெட்டியாகியிருக்கும். பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் நீரை ஊற்றி நன்கு
இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி,
ஒரு கரண்டி மாவை ஊற்றி லேசாக தட்டி, மேலே சிறிது எண்ணெய் ஊற்றி,
முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும்.
* இதேப் போன்று அனைத்து மாவையும் சுட்டு எடுத்தால், சுவையான
சர்க்கரைவள்ளிக் கிழங்கு பேன்கேக் தயார்.



Click it and Unblock the Notifications
