Latest Updates
-
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்.. -
இட்லிக்கு இப்படி ஒருடைம் மட்டன் குருமா செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..
காலிப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இப்படி குருமா செய்யுங்க.. எல்லா டிபனுக்கும் டக்கரா இருக்கும்..
Cauliflower Peas Kurma Recipe In Tamil: உங்கள் வீட்டில் சப்பாத்திக்கு அடிக்கடி குருமா செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே காய்கறியைக் கொண்டு தான் குருமா செய்வீர்களா? உங்கள் வீட்டில் காலிஃப்ளவரும், பச்சை பட்டாணியும் இருந்தால், அவற்றைக் கொண்டு குருமா செய்யுங்கள்.
இந்த குருமா சப்பாத்தி, பூரிக்கு மட்டுமின்றி, அனைத்துவிதமான டிபனுடனும் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். ஒருமுறை இந்த சுவையில் குருமா செய்து சாப்பிட்டால், பின் அடிக்கடி நீங்களே செய்து சாப்பிடுவீர்கள். முக்கியமாக இந்த குருமா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு காலிஃப்ளவர் பட்டாணி குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காலிஃப்ளவர் பட்டாணி குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காலிஃப்ளவர் - 300 கிராம்
* எண்ணெய் - 2 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* வேக வைத்த பச்சை பட்டாணி - 1/2 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 3/4 கப்
* பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 6
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் காலிஃப்ளவரை மஞ்சள் தூள் கலந்த சுடுநீரில் போட்டு 5
நிமிடம் ஊற வைத்து எடுத்து, சுத்தமான நீரில் 2 முறை அலசி தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், பொட்டுக்கடலை, முந்திரி,
சோம்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து பேஸ்ட்
செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன்
கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, அத்துடன்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும்
கரம் மசாலா சேர்த்து நன்கு 1 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் சுத்தம் செய்து வைத்துள்ள காலிஃப்ளவர் மற்றும் வேக
வைத்துள்ள பச்சை பட்டாணியை சேர்த்து நன்கு கிளறி விட்டு, மூடி வைத்து
மிதமான தீயில் வைத்து காய்கறியை முக்கால்வாசி வேக வைக்க வேண்டும்.
* பின்பு அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து கிளறி,
சிறிது நீரை ஊற்றி கிளறி மூடி வைத்து 5 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து,
கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான காலிஃப்ளவர் பட்டாணி குருமா
தயார்.



Click it and Unblock the Notifications