Latest Updates
-
Avani 2026 Rasipalan: ஆவணி மாதத்தில் துரதிர்ஷ்டத்தால் அவதிப்படப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
Avani Matha Rasipalan 2026: ஆவணி மாதம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும் தெரியுமா? -
அணுகுண்டு வெடித்து உலகமே அழிந்தாலும் இந்த உயிரினங்கள் அழியாதாம் - எந்தெந்த உயிரினங்கள் தெரியுமா? -
செஃப் தீனா ஸ்டைல் பீன்ஸ் பருப்பு பொரியல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
நாக பஞ்சமி அன்று சூரியன்-கேது இணைவதால் நஷ்டத்தையும், தோல்விகளையும் சந்திக்கப்போகும் 4 ராசிகள் -
ராகு-கேது தோஷம் நீங்கணுமா? அப்ப நாக பஞ்சமி அன்று உங்க ராசிக்கேற்ப இந்த பரிகாரங்களை செய்யுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் புடலங்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
நாக பஞ்சமியில் நடக்கும் சந்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிகளின் பணக்கஷ்டம் தீர்ந்து, பண வரவு அதிகரிக்கப்போகுது! -
தமிழ்நாட்டில் கள்ளக்காதல் அதிகமிருக்கும் டாப் மாவட்டங்கள் - முதலிடத்தில் எந்த மாவட்டம் இருக்கு தெரியுமா? -
ஹோட்டல் ஸ்டைல் ரவா தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
தினமும் காபி, டீ-க்கு பதிலா.. ஈவ்னிங் டைம்-ல கேரட் பால் செஞ்சு குடிங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
Carrot Milk Recipe In Tamil: உங்கள் வீட்டில் எப்பவும் காபி, டீ தான் செஞ்சு குடிப்பீங்களா? அதுவும் உங்கள் பிள்ளைகளும் காபி, டீயைத் தான் குடிப்பாங்களா? அப்படியானால் இனிமேல் மாலை வேளையில் அதைக் கொடுப்பதற்கு பதிலாக, வீட்டில் கேரட் இருந்தால், அதைக் கொண்டு பால் செய்து கொடுங்கள்.

இந்த கேரட் பால் மிகவும் ருசியாக இருப்பதோடு, சத்தானதும் கூட. குறிப்பாக கண்களுக்கு மிகவும் நல்லது. இந்த பாலை குடித்து வந்தால், பார்வை பிரச்சனையே வராது. மேலும் கேரட் சாப்பிட மறுக்கும் பிள்ளைகளுக்கு இப்படி கேரட்டை கொடுக்கும் போது கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு இந்த கேரட் பாலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரட் பால் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
கேரட் விழுதிற்கு...
* கேரட் - 350 கிராம்
* பாதாம் - 15
* முந்திரி - 5
* ஏலக்காய் - 1
* தண்ணீர் - 1/2 கப்
பால் தயாரிப்பதற்கு...
* பால் - 1/2 லிட்டர்
* கேரட் விழுது - 4 டேபிள் ஸ்பூன்
* நாட்டுச்சர்க்கரை - 4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் கேரட்டின் தோலை நீக்கிவிட வேண்டும்.
* பின்பு குக்கரை எடுத்து, அதில் கேரட்டை சேர்த்து, அத்துடன் பாதாம்,
முந்திரி, ஏலக்காய் மற்றும் 1/2 கப் நீரை ஊற்றி, குக்கரை மூடி
அடுப்பில் வைத்து, 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பாதாமின் தோலை நீக்கிவிட
வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் கேரட், பாதாம், முந்திரி, ஏலக்காய் மற்றும்
குக்கரில் உள்ள வேக வைத்த நீரை ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு பாத்திரத்தில் 1/2 லிட்டர் காய்ச்சாத பாலை ஊற்றி
அடுப்பில் வைத்து, அதில் 4 டேபிள் ஸ்பூன் அரைத்து வைத்துள்ள கேரட்
விழுதை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். மீதமுள்ள கேரட் விழுதை
ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜ்ஜில் வைத்துக் கொண்டால், 3 நாட்கள் வரை
வைத்து சாப்பிடலாம்.
* பால் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதை இறக்கி, அத்துடன்
நாட்டுச்சர்க்கரை சேர்த்து கலந்து, மேலே துருவிய பாதாமை தூவி
பரிமாறினால், சுவையான கேரட் பால் தயார்.
ஊட்டச்சத்து மதிப்புகள்:
1 டம்ளர் கேரட் பாலில் உள்ள சத்துக்கள் பின்வருமாறு:
* கலோரிகள் : 160-180 kcal
* புரதச்சத்து : 6-7 கிராம் (பால் மற்றும் பாதாமில் இருந்து)
* கார்போஹைட்ரேட் : 20-22 கிராம்
* நார்ச்சத்து : 1.5-2 கிராம்
* கொழுப்பு : 7-8 கிராம் (பாதாம், முந்திரி மற்றும் பாலில் உள்ள நல்ல கொழுப்பு)



Click it and Unblock the Notifications