Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
1/2 கப் தேங்காயும், 1 கப் கேரட்டும் இருந்தா இந்த குருமாவை வையுங்க... தோசைக்கு மட்டன் குருமா மாறியே இருக்கும்!
Carrot Masala Kurma Recipe in Tamil: இரவு வேளையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் தோசை அல்லது சப்பாத்தி தான் டின்னராக இருக்குமா? அந்த சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான சைடு டிஷ் செய்து அலுத்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில், அதே சமயம் அசைவ குருமாவை மறக்கடிக்கும் வகையில் ஒரு சூப்பரான சைவ குருமாவை செய்ய நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் ஒரு கப் கேரட்டும், கொஞ்சம் தேங்காயும், தக்காளியும் இருந்தால், அட்டகாசமான சுவையில் குருமா செய்யலாம். இந்த குருமா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். இந்த கேரட் குருமா சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட.

உங்களுக்கு சூப்பரான கேரட் குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரட் குருமாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- நறுக்கிய கேரட்- அரை கிலோ
- நறுக்கிய தக்காளி - 2
- தேங்காய் துருவல் - அரை கப்
- பச்சை மிளகாய் - 6
- இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
- கசகசா - 1 டீஸ்பூன்
- நறுக்கிய பெரிய வெங்காயம் - 3
- ஏலக்காய் - 2
- கிராம்பு - 2
- பட்டை - 1
- மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
- கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
செய்முறை :
- முதலில் கேரட்டை நன்றாக கழுவி விட்டு மூழ்கும் அளவு தண்ணீரில் போட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், கசகசா போட்டு மென்மையான பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு தாளிக்கவும்.
- பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை தாளிக்க வேண்டும்.
- இஞ்சி, பூண்டு பச்சை வாசனை போனதும் அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும் அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளியை போட்டு நன்கு வதக்கவும்.
-பின்னர் மஞ்சள் தூள் மற்றும் வேக வைத்துள்ள கேரட்டை சேர்த்து வதக்க வேண்டும்.
- பின்னர் அரைத்து வைத்திருக்கும் தேங்காய், கசகசா கலவை ஆகியவற்றை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு கொதிக்க விட வேண்டும்.
- குழம்பானது சற்று கெட்டியானதும், கொத்தமல்லி தூவி இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான கேரட் குருமா ரெடி!
- இந்த கேரட் குருமா தோசை, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications