Latest Updates
-
புதன் நட்சத்திர மாற்றத்தால் இன்னும் 2 நாட்களில் சிம்மம் உள்ளிட்ட 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
இந்த 4 தேதிகளில் பிறந்த பெண்கள் முதலாளியாக இருக்க பிறந்தவர்களாம் - இவங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம் -
இதுல உங்க காது எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்க உண்மையான குணத்தை சொல்றோம்.. -
11,000 ஆண்டுகளுக்கு முன்பே உலகில் முதலில் தோன்றிய பழம் எது தெரியுமா? இப்பவும் நாம இந்த பழத்தை சாப்பிடுறோமாம் -
திருமணத்திற்கு முந்தைய உறவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு உங்கள் உரிமையை மாற்றும்! -
சத்தான எள்ளுப்பொடி சாதம் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - உடம்பு இரும்பு மாதிரி மாறிடும் -
பரோட்டா கடை வெஜ் சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு தெரிஞ்சு ட்ரை பண்ணுங்க.. -
திருமண சீசனில் தங்கம் விலை திடீர் உயர்வு: பட்ஜெட்டை சமாளிக்க முடியாமல் திணறும் குடும்பங்கள்! -
ஜூன் 15-ல் உருவாகும் அரிய புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
ஆண்களே! சரும நிறத்தை அதிகரிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை போடுங்க..
சிம்பிளான... கேரட் குருமா
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது பூரி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? ஆனால் உங்கள் வீட்டில் வெறும் கேரட் மற்றும் பீன்ஸ் மட்டும் தான் உள்ளதா? அப்படியானால் அவற்றை மட்டும் கொண்டு அற்புதமான குருமா செய்யலாம்.
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது பூரி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? ஆனால் உங்கள் வீட்டில் வெறும் கேரட் மற்றும் பீன்ஸ் மட்டும் தான் உள்ளதா? அப்படியானால் அவற்றை மட்டும் கொண்டு அற்புதமான குருமா செய்யலாம். இந்த கேரட் குருமா செய்வது மிகவும் சுலபம் மற்றும் பேச்சுலர்கள் கூட இதை செய்யலாம். கேரட் கண்களுக்கு மிகவும் நல்லது என்பதால் இதை அதிகம் உணவில் சேர்ப்பது நல்லது.

உங்களுக்கு கேரட் குருமா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரட் குருமாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கேரட் - 2 (பெரியது மற்றும் பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 5 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - ஒரு கையளவு (நறுக்கியது)
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1 கப்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்
* கசகசா - 1 டீஸ்பூன்
* இஞ்சி - 2 டீஸ்பூன் (நறுக்கியது)
* பூண்டு - 4-5 பல்
* வரமிளகாய் - 4-5
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீர் ஊற்றி நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரில் நறுக்கிய கேரட் மற்றும் பீன்ஸைப் போட்டு, சிறிது உப்பு சேர்த்து, நீர் ஊற்றி குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் அரைத்த மசாலாவை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி மீண்டும் அடுப்பில் வைத்து மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான கேரட் குருமா தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications