ஒருமுறை டீயை இந்த மாதிரி போடுங்க.. அப்புறம் பாருங்க.. எப்பவும் இப்படி தான் செய்வீங்க...

Posted By:

Caramel Tea Recipe In Tamil: நீங்கள் போடும் டீ சுவையாக இல்லையா? நீங்கள் டீ போடுகிறேன் என்றாலே வீட்டில் உள்ளோர் பயப்படுவார்களா? இதனால் நீங்கள் மிகவும் வருத்தப்படுகிறீர்களா? அப்படியானால் இனிமேல் அந்த கவலை வேண்டாம். நல்ல சுவையான டீயைப் போட நினைத்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்டைலில் போடுங்கள்.

இதுவரை நீஙகள் இஞ்சி டீ, ஏலக்காய் டீ, மசாலா டீ என்று எத்தனையோ டீக்களை குடித்திருக்கலாம். கேரமல் டீயை குடித்துள்ளீர்களா? இல்லையென்றால் இன்று அந்த டீயை ட்ரை செய்யுங்கள். இந்த டீ வழக்கமாக செய்யும் டீயின் செய்முறையை விட சற்று வித்தியாசமாக இருக்கும். அதே சமயம் சற்று நேரம் எடுத்தாலும், இந்த டீ அட்டகாசமான சுவையில் இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி குடிக்குமாறு இருக்கும்.

Caramel Tea How To Make a Caramel Tea Recipe

உங்களுக்கு கேரமல் டீ ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரமல் டீ ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* சர்க்கரை - 2 ஸ்பூன்
* டீ தூள் -2 ஸ்பூன்
* தண்ணீர் - 1 டம்ளர்
* இஞ்சி - 1 சிறிய துண்டு (தட்டிக் கொள்ளவும்)
* ஏலக்காய் - 2
* பட்டை - 1 துண்டு
* பால் - 1 டம்ளர்
* சர்க்கரை - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் 2 டீஸ்பூன் டீ தூள் சேர்த்து, மிதமான தீயில் வைத்து, லேசான பொன்னிறத்தில் வரும் வரை தொடர்ந்து கிளறி விட வேண்டும். அதிகமாக கருக வைத்துவிட வேண்டாம். பின் டீயின் சுவையே மாறிவிடும்.
* பின் அதில் 1 டம்ளர் நீரை ஊற்றி 2 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அதில் தட்டி வைத்துள்ள இஞ்சி, ஏலக்காய், பட்டை ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு அதில் 1 டம்ளர் பாலை ஊற்றி கிளறி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் சுவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து கொதி விட்டு இறக்கி வடிகட்டினால், சுவையான கேரமல் டீ தயார்.

Image Courtesy: Freepik

[ of 5 - Users]
Desktop Bottom Promotion