முட்டைக்கோஸ் இருந்தா இப்படி குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்..

Posted By:

Cabbage Kurma Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு எப்போதும் ஒரே சுவையில் தான் சைடு டிஷ் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை முட்டைக்கோஸ் கொண்டு குருமா செய்யுங்கள். இப்படி முட்டைக்கோஸை குருமா செய்யும் போது, முட்டைக்கோஸ் பிடிக்காதவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இந்த பக்குவத்தில் குருமாவை செய்தால், சப்பாத்தியுடன் மட்டுமின்றி, சாதம், தோசை, இட்லியுடனும் சாப்பிடலாம். முக்கியமாக இந்த குருமா செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும்.

Cabbage Kurma How To Make Muttaikose Kurma For Chapati

உங்களுக்கு இந்த முட்டைக்கோஸ் குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டைக்கோஸ் குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 3 ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3/4 டீஸ்பூன்
* பெரிய தக்காளி - 1 (நறுக்கியது)
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 3/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* முட்டைக்கோஸ் - 2 கப் (மெல்லியதாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* அரைத்த மசாலா
* தண்ணீர் - தேவையான அளவு

மசாலா அரைப்பதற்கு...

* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* புதினா- 1 கைப்பிடி
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 2
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கல்பாசி - சிறிது
* கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மல்லித் தூள், சீரகத் தூள், கரம் மசாலா, சாம்பார் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து குறைவான தீயில் வைத்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய முட்டைக்கோஸை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், புதினா, பட்டை, கிராம்பு, சோம்பு, கல்பாசி, கசகசா சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அரைத்த மசாலாவை குக்கரில் உள்ள முட்டைக்கோஸ் உடன் சேர்த்து நன்கு கிளறி, குருமாவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி, உப்பு சுவை பார்த்து வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கினால், சுவையான முட்டைக்கோஸ் குருமா தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, November 12, 2026, 22:40 [IST]
Desktop Bottom Promotion