Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி நாளை முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கலாம்.. உஷார்.. -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க, ஒரே வாரத்தில் உடல் எடையில் மாற்றத்தை பாப்பீங்க..! -
இன்றைய ராசிபலன் 28 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு சோதனைகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
புதன் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
பெங்காலி வெஜ் புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க -
கோவிலுக்குள் செல்வதற்கு முன் ஏன் செருப்பை அவசியம் கழட்ட வேண்டும் தெரியுமா? இதுல பல ரகசியம் இருக்கு -
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் டிக்கா மசாலா - எப்படி செய்யணும் தெரியுமா? -
உங்க கழுத்து கருப்பா இருக்குதா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
August 2026 Monthly Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் ஆபத்துக்களையும், அவமானங்களையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள்
இட்லி, தோசைக்கு எப்பவும் ஒரே மாதிரி சட்னி செஞ்சு அலுத்துடுச்சா? ஒருடைம் முட்டைக்கோஸ் வெச்சு சட்னி செய்யுங்க..
Cabbage Chutney Recipe In Tamil: காலையில் இட்லி, தோசைக்கு எப்போதும் ஒரே மாதிரியான சட்னியை செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சட்னியை செய்ய விரும்புகிறீர்களா? இதுவரை நீங்கள் முட்டைக்கோஸை பொரியல், சாம்பார் போன்ற வடிவில் தான் செய்து சாப்பிட்டிருப்பீர்கள்.
ஆனால் முட்டைக்கோஸை சட்னியாகவும் செய்து சாப்பிடலாம் தெரியுமா? அதுவும் இந்த முட்டைக்கோஸ் சட்னி செய்வது மிகவும் சுலபம். வெறும் 10 நிமிடத்திலேயே செய்துவிடலாம். இந்த சட்னியானது இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு முட்டைக்கோஸ் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டைக்கோஸ் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முட்டைக்கோஸ் - 1 கப் (நறுக்கியது)
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 3
* வெங்காயம் - 1
* தக்காளி - 1
* புளி - சிறிய துண்டு
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய் சேர்த்து வறுக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை
வதக்க வேண்டும்.
* பின்பு தக்காளியை சேர்த்து, அத்துடன் சிறிய துண்டு புளியையும்
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் முட்டைக்கோஸை சேர்த்து, சிறிது உப்பு தூவி, கறிவேப்பிலை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* முட்டைக்கோஸ் வெந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு அதை இறக்கி குளிர
வைத்து மிக்சர் ஜாரில் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து,
சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான முட்டைக்கோஸ் சட்னி
தயார்.
Image Courtesy: The Biggest Indian Recipe Aggregator



Click it and Unblock the Notifications