Latest Updates
-
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா?
1 கப் ரவை வெச்சு காலையில் ஒருமுறை இந்த டிபன் செய்யுங்க.. டேஸ்டியா இருக்கும்..
Bun Dosa Recipe In Tamil: காலையில் இட்லி, தோசை செய்ய மாவு இல்லையா? என்ன டிபன் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் ரவை உள்ளதா? அப்படியானால் அந்த ரவையைக் கொண்டு பன் தோசை செய்யுங்கள். இந்த பன் தோசை செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும்.
மேலும் இது தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக வேலைக்கு செல்பவர்கள் காலையில் வேகமாக செய்யக்கூடியவாறு எளிமையான செய்முறையைக் கொண்டிருக்கும்.

உங்களுக்கு பன் தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன் தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - சிறிது
* பச்சை மிளகாய் - 1
* இஞ்சி - சிறு துண்டு
* கறிவேப்பிலை - சிறிது
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* ரவை - 1 கப்
* பச்சரிசி - 2 டீஸ்பூன்
* புளித்த தயிர் - 1/4 கப்
* தண்ணீர் - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* ஆப்ப சோடா - 2 சிட்டிகை
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க
வேண்டும்.
* பின்பு அதில் பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள்
சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு தூவி கண்ணாடி
வதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் கொத்தமல்லியை சேர்த்து வதக்கி இறக்கி தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் 1 கப் ரவை, 2 டீஸ்பூன் பச்சரிசி மாவு, 1/4 கப்
புளித்த தயிர், 1/2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் அரைத்த ரவையை ஊற்றி, அத்துடன் வதக்கிய
வெங்காய கலவையை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து
கொள்ள வேண்டும். பின் ஒரு தட்டு கொண்டு மூடி வைத்து 10-15 நிமிடம் ஊற
வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, அதில் 2 சிட்டிகை ஆப்ப
சோடாவை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். மாவை மிகவும் கெட்டியாக
இருந்தால், சிறிது நீரை ஊற்றிக் கொள்ளுங்கள். ஆனால் மிகவும் நீராகவும்
மாவு இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
* பின் ஒரு தாளிப்பு கரண்டி அல்லது குழி கரண்டி அல்லது குழியான ஆப்ப
சட்டியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பின்
அதில் 1 கரண்டி மாவை ஊற்றி, மூடி வைத்து மிதமான தீயில் வைத்து வேக
வைக்க வேண்டும்.
* வெந்ததும் மூடியைத் திறந்து, ஒரு ஸ்பூன் கொண்டு அப்படியே திருப்பி
போட்டு மீண்டும் மூடி வைத்து வேக வைத்து, பின் எடுக்க வேண்டும்.
* இதேப் போல் அனைத்து மாவையும் சுட்டு எடுத்தால், சுவையான பன் தோசை
தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications