4 பிரட் துண்டும், 1 கப் தேங்காயும் இருந்தா.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செஞ்சு பாருங்க.. டேஸ்டியா இருக்கும்...

Posted By:

Bread Balls Recipe In Tamil: உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்களா? அப்படியானால் நிச்சயம் எந்நேரமும் சாப்பிட ஸ்நாக்ஸ் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். இப்படி எப்போதும் ஸ்நாக்ஸ் கேட்கும் குழந்தைகளுக்கு கடைகளில் ஸ்நாக்ஸ் வாங்கி கொடுப்பதற்கு பதிலாக, வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால், பணம் மிச்சம் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியமும் பாழாகாமல் இருக்கும்.

அதுவும் உங்கள் வீட்டில் பிரட் மற்றும் தேங்காய் இருந்தால், அவற்றைக் கொண்டு அட்டகாசமான சுவையில் ஒரு பிரட் பால்ஸ் செய்து கொடுங்கள். இந்த பிரட் பால்ஸ் 10 நிமிடத்தில் செய்யக்கூடிய வகையில் மிகவும் ஈஸியாக இருக்கும்.

Bread Balls How To Make a Bread Balls Recipe

உங்களுக்கு பிரட் பால்ஸ் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பிரட் பால்ஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பிரட் - 4 துண்டு
* துருவிய தேங்காய் - 1 கப்
* நாட்டுச் சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் - 1/4 டீஸ்பூன்
* பாதாம் மற்றும் முந்திரி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* காய்ச்சி ஆற வைத்த பால் - 2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் பிரட் துண்டுகளை எடுத்து, அவற்றை துண்டுகளாக்கி மிக்சர் ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பௌலில் அரைத்ததை எடுத்து, அத்துடன் நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய் தூள், துண்டுகளாக்கப்பட்ட பாதாம் மற்றும் முந்திரியை சேர்த்து கைகளால் பிரட்டி விட வேண்டும்.
* பிறகு அதில் 2 டேபிள் ஸ்பூன் காய்ச்சி ஆற வைத்த பாலை ஊற்றி, கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* பின்னர் பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உருட்டி வைத்துள்ளதை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான மற்றும் மொறுமொறுப்பான பிரட் பால்ஸ் தயார்.

Image Courtesy: CheezzKitchen

[ of 5 - Users]
Story first published: Sunday, May 26, 2024, 19:55 [IST]
Desktop Bottom Promotion