Latest Updates
-
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
செட்டிநாடு பாகற்காய் சாம்பார் ரெசிபி - இந்த மாதிரி வைச்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட ஆசையா சாப்பிடுவாங்க -
இந்தியாவில் அதிக கட்டணம் வசூலிக்கும் டாப் 5 சுங்கச்சாவடிகள் என்னென்ன தெரியுமா? -
சத்தான மீல் மேக்கர் கட்லெட் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மொறுமொறுனு சாப்பிட சூப்பரா இருக்கும் -
ஆகஸ்ட் 05-ல் புதன் கடக ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தாபா ஸ்டைல் முட்டை பட்டாணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
Commonwealth Games 2026: காமன்வெல்த் போட்டிகளுக்கும், ஒலிம்பிக் போட்டிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன? -
Headline for Deeplink -
பீர்க்கங்காய் தக்காளி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க..
இட்லிக்கு மாவு இல்லையா? சுரைக்காய் வெச்சு ஒருவாட்டி இப்படி இட்லி சுடுங்க.. ருசியானதும் சத்தானதும் கூட...
Bottlegourd Idli Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலை வேளையில் பெரும்பாலும் இட்லி தான் செய்வீர்களா? ஆனால் உங்கள் வீட்டில் இட்லி சுட மாவு தீர்ந்துவிட்டதா? என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சுரைக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த சுரைக்காய் கொண்டு இட்லி சுடுங்கள்.
இந்த சுரைக்காய் இட்லி சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. உங்கள் வீட்டில் உள்ளோர் சுரைக்காய் சாப்பிடமாட்டார்கள் என்றால், அவர்களுக்கு இப்படி செய்து கொடுத்தால், நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் இப்படி சுடும் சுரைக்காய் இட்லிக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி அற்புதமான சைடு டிஷ்ஷாக இருக்கும்.

உங்களுக்கு சுரைக்காய் இட்லியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுரைக்காய் இட்லி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சுரைக்காய் - 1
* இட்லி ரவை - 1 கப்
* பச்சை மிளகாய் - 1
* இஞ்சி - சிறிய துண்டு
* கொத்தமல்லி - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
* துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* புளித்த மோர் - 1 கப்
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் சுரைக்காயின் தோலை நீக்கிவிட்டு, துருவிக் கொள்ள
வேண்டும்.
* பின் துருவிய சுரைக்காயை ஒரு கப் எடுத்து ஒரு பாத்திரத்தி போட்டு,
அத்துடன் 1 கப் இட்லி ரவையை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய இஞ்சியை
சேர்க்க வேண்டும்.
* பிறகு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, துருவிய
தேங்காய் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு
மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் தாளித்ததை பாத்திரத்தில் உள்ள சுரைக்காயுடன் சேர்த்து கிளறி
விட வேண்டும்.
* பின்பு அதில் புளித்த மோரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 30 நிமிடம் ஊற
வைக்க வேண்டும்.
* அதன் பின் இட்லி தட்டில் எண்ணெய் தடவி, கலந்து வைத்துள்ளதை கொஞ்சம்
கொஞ்சமாக எடுத்து வைத்து, இட்லி பாத்திரத்தினுள் வைத்து, 15 நிமிடம்
வேக வைத்து எடுத்தால், சுவையான சுரைக்காய் இட்லி தயார்.



Click it and Unblock the Notifications