Latest Updates
-
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்! -
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா? -
4 வெங்காயம் இருந்தா.. இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்...! -
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் ராயல் தேங்காய் சட்னி ரெசிபி... இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க... செமையா இருக்கும்...!
இட்லி, தோசைக்கு சுரைக்காய் வெச்சு இப்படி சட்னி செய்யுங்க.. தேங்காய் சட்னியே தோத்துப்போயிடும்...
Sorakkai Chutney Recipe In Tamil: காலையில் இட்லி, தோசைக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு தேங்காய் சட்னி என்றால் ரொம்ப பிடிக்குமா? ஆனால் வீட்டில் தேங்காய் இல்லையா? கவலை வேண்டாம். வீட்டில் சுரைக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த சுரைக்காயைக் கொண்டு அருமையான சுவையில், அதுவும் தேங்காய் சட்னியே தோற்றுப் போகும் அளவில் அட்டகாசமான சட்னி செய்யுங்கள்.
என்ன புதுமையாக உள்ளதா? ஆம், சுரைக்காயைக் கொண்டு செய்யக்கூடிய சட்னி, தேங்காய் சட்னி போன்றே தோற்றத்தைக் கொண்டிருக்கும். அதே சமயம் சுவை வித்தியாசமாக இருக்கும். முக்கியமாக இந்த சட்னியை தண்ணி சட்னி போன்று நீர் அதிகம் ஊற்றி செய்து இட்லி தோசையுடன் சாப்பிட்டால், வேற லெவலில் இருக்கும்.

உங்களுக்கு சுரைக்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுரைக்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பிஞ்சு சுரைக்காய் - 1
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 4
* இஞ்சி - 2 துண்டு
* பூண்டு - 6 பல்
* கறிவேப்பிலை - 3 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தயிர் - 1 டம்ளர்
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் பிஞ்சு சுரைக்காயின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், சுரைக்காயை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் 4 பச்சை மிளகாய், 2 துண்டு இஞ்சி, 6 பல் பூண்டு
சேர்த்து, அனைத்தும் சுருண்டு வரும் வரை நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை தூவி 1 நிமிடம்
கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் சீரகத்தை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டம்ளர் தயிரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்து, சற்று அதிகமாக நீரை
ஊற்றி, நீர் சட்னி பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு,
வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து
கிளறினால், சுவையான சுரைக்காய் சட்னி தயார்.



Click it and Unblock the Notifications











