Latest Updates
-
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது!
சுரைக்காய் அடை தோசை
அடை தோசையில் சுரைக்காய் அடை தோசை சற்று வித்தியாசமான ருசியில் இருக்கும். உங்களுக்கு சுரைக்காய் அடை தோசை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
தோசையில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் அடை தோசை உடலுக்கு மிகவும் நல்லது. இதில் புரோட்டீன், இரும்புச்சத்து போன்றவை அதிகம் நிறைந்திருப்பதால், வாரத்திற்கு ஒருமுறை அடை தோசை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அதிலும் வளரும் குழந்தைகளுக்கு வாரத்திற்கு ஒருமுறை இம்மாதிரியான தோசை சுட்டுக் கொடுப்பது ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் தடுக்கும்.

அடை தோசையில் சுரைக்காய் அடை தோசை சற்று வித்தியாசமான ருசியில் இருக்கும். உங்களுக்கு சுரைக்காய் அடை தோசை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுரைக்காய் அடை தோசையின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசி பயறு - 1/4 கப்
* பச்சை பயறு - 1/4 கப்
* கடலை பருப்பு - 1/4 கப்
* கொண்டைக்கடலை - 1/4 கப்
* துவரம் பருப்பு - 1/4 கப்
* உளுத்தம் பருப்பு - 1/4 கப்
* மைசூர் பருப்பு - 1/4 கப்
* கருப்பு சுண்டல் - 1/4 கப்
* அரிசி - 2 கப்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பலை - சிறிது
* சுரைக்காய் - 4 கப் (துருவியது)
* மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - தோசை சுடுவதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் அனைத்து பருப்புக்கள் மற்றும் அரிசியை நீரில் குறைந்தது 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
* பின் அதை நன்கு கழுவி, மிக்ஸி ஜார் அல்லது கிரைண்டரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளுங்கள்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், பெருங்காயத் தூள், வர மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
* பிறகு அதில் துருவிய சுரைக்காயை சேர்த்து நன்கு 5 நிமிடம் கிளறி இறக்கி, அரைத்து வைத்துள்ள மாவுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.
* அதோடு மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விடுங்கள். இப்போது அடை மாவு தயார்.
* அதன் பின் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும் அடை மாவு கொண்டு தோசை சுட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும், பின்னும் நன்கு பொன்னிறமாகும் வரை வேக வைத்து எடுத்தால், சுவையான சுரைக்காய் அடை தோசை ரெடி! இந்த அடை தோசைக்கு தேங்காய் சட்னி பிரமாதமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
