Latest Updates
-
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. மதியம் சிம்பிளா இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும் சத்தானதும் கூட..
Drumstick Leaves Thogayal Recipe In Tamil: மதிய வேளையில் எப்போதும் சாம்பார், குழம்பு என்று செய்து போரடித்துவிட்டதா? சற்று சிம்பிளாக, அதே சமயம் உடலுக்கு வலு சேர்க்கும் ஒரு சைடு டிஷ் செய்து சாதத்துடன் சாப்பிட நினைக்கிறீர்களா? வீட்டில் முருங்கைக்கீரை உள்ளதா? அப்படியானால் அந்த முருங்கைக்கீரையைக் கொண்டு சாம்பார், பொரியல் என்று செய்யாமல், துவையல் செய்து சாப்பிடுங்கள்.
இப்படி ஒருமுறை முருங்கைக்கீரை துவையலை செய்தால், 1 வாரம் வரை வைத்து சாப்பிடலாம். அந்த அளவில் நன்றாக இருக்கும். முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், இந்த துவையல் பெண்களுக்கு மிகவும் நல்லது. வளரும் குழந்தைகளுக்கு இப்படி அடிக்கடி செய்து கொடுக்கும் போது, அவர்களின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

உங்களுக்கு முருங்கைக்கீரை துவையலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்கீரை துவையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டீஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 10
* கடுகு - 1 டீஸ்பூன்
* முருங்கைக்கீரை - 2 கைப்பிடி
* உப்பு - சுவைக்கேற்ப
* புளி - 1 எலுமிச்சை அளவு
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* தாளிப்பு வடகம் - சிறிது
செய்முறை:
* முதலில் புளியை சிறிது நீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், 1 டேபிள் ஸ்பூன் மல்லி, 1 டீஸ்பூன் மிளகு, 1/4
டீஸ்பூன் வெந்தயம் மற்றும் 1 டீஸ்பூன் சீரகம் சேர்த்து நல்ல மணம்
வரும் வரை வறுக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய் மற்றும் கடுகு சேர்த்து சிறிது நேரம் வறுக்க
வேண்டும்.
* பின்பு வறுத்த பொருட்களை ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க
வேண்டும்.
* பிறகு அதே வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், 2
கைப்பிடி முருங்கைக்கீரையை சேர்த்து, கீரை நன்கு சுருண்டு வரும் வரை
வதக்கி இறக்க வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து பொடித்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் ஊற வைத்துள்ள புளியை நீருடன் சேர்த்து நன்கு அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் வதக்கி வைத்துள்ள முருங்கைக்கீரையை சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு தூவி மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 4 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பு வடகத்தை சேர்த்து தாளிக்க
வேண்டும். ஒருவேளை தாளிப்பு வடகம் இல்லாவிட்டால், 1/2 டீஸ்பூன் கடுகு
மற்றும் 1/2 டீஸ்பூன் சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து, அதிகமாக நீரை
ஊற்றிவிடாமல் சிறிது நீரை ஜாரில் ஊற்றி அலசி ஊற்றி நன்கு கிளறி விட
வேண்டும்.
* துவையலில் இருந்து நீர் வற்றி, அதன் நிறம் மாறத் தொடங்கியதும்,
அடுப்பை அணைத்துவிட்டால், சுவையான முருங்கைக்கீரை துவையல் தயார்.



Click it and Unblock the Notifications