Latest Updates
-
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
தோசைக்கு ஒருடைம் பாம்பே குருமாவை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 தோசை எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க...
Bombay Kurma Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் செய்யும் இட்லி தோசைக்கு பெரும்பாலும் சட்னியை தான் செய்வீர்களா? சட்னி செய்து போரடித்துவிட்டதா? சற்று ஊற்றி சாப்பிடுமாறு ஏதாவது செய்ய நினைக்கிறீர்களா? வீட்டில் கடலை மாவு இருந்தால், அதைக் கொண்டு பாம்பே குருமாவை செய்யுங்கள்.
இந்த பாம்பே குருமா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இந்த குருமா இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, பூரி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

உங்களுக்கு பாம்பே குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாம்பே குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலை மாவு - 2 ஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* பிரியாணி இலை - 1
* அன்னாசிப்பூ - 1
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 2
* கல்பாசி - சிறிது
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (உடைத்தது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைககேற்ப
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* புதினா இலைகள் - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* தண்ணீர் - 2 கப்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு, பட்டை, பிரியாணி இலை, அன்னாசிப்பூ, ஏலக்காய்,
கிராம்பு, கல்பாசி, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் நறுக்கிய வெக்ாயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள்
தூள் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் புதினா இலைகள், கொத்தமல்லி இலைகளை சிறிது சேர்த்து
நன்கு 1 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
* அடுத்து கடலை மாவை ஒரு கிண்ணத்தில் எடுத்து அதில் ஒரு கப் நீர்
சேர்த்து கட்டிகளின்றி கரைத்துக் கொண்டு, வாணலியில் சேர்த்து கிளறி,
2-3 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான பாம்பே குருமா
தயார்.



Click it and Unblock the Notifications