Latest Updates
-
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா
பத்தே நிமிடத்தில் ப்ளாக் பெப்பர் சிக்கன் ப்ரை செய்வது எப்படி தெரியுமா?
இனிமேல் சிக்கன் 65 செய்வதற்கு பதிலாக ப்ளாக் பெப்பர் சிக்கன் ப்ரை செய்து சாப்பிடுங்கள். இந்த ப்ளாக் பெப்பர் சிக்கன் ப்ரை மிகவும் சுவையானது மட்டுமின்றி, செய்வதற்கு மிகவும் சுலபமானதும் கூட.
சிக்கன் பிரியரா நீங்கள்? நீங்கள் சிக்கன் வாங்கினால் தவறாமல் சிக்கன் 65 செய்து சாப்பிடுவீர்களா? ஆனால் இனிமேல் சிக்கன் 65 செய்வதற்கு பதிலாக ப்ளாக் பெப்பர் சிக்கன் ப்ரை செய்து சாப்பிடுங்கள். இந்த ப்ளாக் பெப்பர் சிக்கன் ப்ரை மிகவும் சுவையானது மட்டுமின்றி, செய்வதற்கு மிகவும் சுலபமானதும் கூட. குறிப்பாக குளிர்காலத்தில் ப்ளாக் பெப்பர் சிக்கன் ப்ரை செய்து சாப்பிட்டால், சளி பிரச்சனை இருந்தாலும் அதிலிருந்து சற்று நிவாரணம் கிடைக்கும். முக்கியமாக இந்த ப்ளாக் பெப்பர் சிக்கன் ப்ரை ரெசிபியானது 10 நிமிடத்தில் செய்யக்கூடியது.

உங்களுக்கு ப்ளாக் பெப்பர் சிக்கன் ப்ரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ப்ளாக் பெப்பர் சிக்கன் ப்ரை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எலும்பில்லாத சிக்கன் - 500 கிராம்
* மிளகுத் தூள் - 1-2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எலுமிச்சை சாறு அல்லது வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மைதா - 1/4 கப்
* சோள மாவு - 1/4 கப்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் சிக்கனை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதில் மைதா மாவு, சோள மாவு, கரம் மசாலா, இஞ்சி பூண்டு பேஸ்ட், கொத்தமல்லி, எலுமிச்சை சாறு அல்லது வினிகர், சுவைக்கேற்ப உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு ஒருசேர பிசைந்து சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், ஊற வைத்த சிக்கன் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான மற்றும் காரசாரமான ப்ளாக் பெப்பர் சிக்கன் ப்ரை தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
