Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
1 பீட்ரூட்டும், பன்னீரும் இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. இதுக்கு சைடு டிஷ்ஷே தேவைப்படாது...
Beetroot Paneer Chapati Recipe In Tamil: காலையில் எப்போதும் இட்லி, தோசை என்று செய்து போரடித்துவிட்டதா? இதை விட்டால் சப்பாத்தி செய்வீர்களா? அப்படியானால் வெறும் சப்பாத்தியை எப்போதும் செய்வதற்கு பதிலாக, வீட்டில் பீட்ரூட்டும், பன்னீரும் இருந்தா இந்த சப்பாத்தியை செய்யுங்கள்.
இந்த பீட்ரூட் பன்னீர் சப்பாத்திக்கு சைடு டிஷ் எதுவும் தேவைப்படாது. முக்கியமாக பள்ளிக்கு மதிய உணவாக கொடுத்தும் விடலாம். இந்த சப்பாத்தி நீண்ட நேரம் மென்மையாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இது சத்தானதும் கூட.

உங்களுக்கு பீட்ரூட் பன்னீர் சப்பாத்தியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீட்ரூட் பன்னீர் சப்பாத்தி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 1/2 கிலோ
* பன்னீர் - 200 கிராம் (துருவியது)
* பெரிய பீட்ரூட் - 1 (துருவியது)
* கொத்தமல்லி - 1/4 கட்டு (பொடியாக நறுக்கியது)
* உப்பு - 3/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* ஓமம் - சிறிது
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவைப்பட்டால்
* நெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அந்த மாவுடன் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா, சீரகத் தூள்,
ஓமம் சேர்த்து நன்கு கைகளால் கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் துருவிய பன்னீர், பீட்ரூட் மற்றும் பொடியாக நறுக்கிய
கொத்தமல்லியை சேர்த்து கைகளால் நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து, நீர் ஊற்றாமல் கைகளால்
நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு சற்று இறுக்கமாக பிசைய வேண்டும்.
* தேவைப்பட்டால் மட்டும் நீரை லேசாக தெளித்து பிசைய வேண்டும்.
* பின் பிசைந்த மாவை 15 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து அந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போன்று
மெல்லியதாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும்,
தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியை ஒவ்வொன்றாக சேர்த்து, நெய் ஊற்றி,
முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், பீட்ரூட் பன்னீர் சப்பாத்தி
தயார்.
Image Courtesy: SIMPLY SAMAYAL



Click it and Unblock the Notifications